புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முத்து பேச்சை கேட்டு குதூகலமான விஜயா ரோகினி.. மீனா எடுத்த முடிவு, அதிர்ச்சியில் இருக்கும் குடும்பம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவின் நண்பர் ஒருவர் அண்ணனின் கல்யாண பத்திரிக்கையை கொண்டு வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது முத்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு நடந்து திடீர் கல்யாணத்தை ரொம்பவே சலிப்பாக சொல்கிறார். அதாவது அண்ணன் கல்யாணத்தில் ஏற்பட்ட குளறுபடியால் தான் மாட்டிக் கொண்டதாக சொல்கிறார்.

உச்சகட்ட கோபத்தில் இருக்கும் மீனா

இதை கேட்டதும் மீனா முகம் அப்படியே வாடி போகிவிட்டது. ஆனால் முத்து அந்த அர்த்தத்தில் சொல்லாமல் எதார்த்தமாக மனோஜை நக்கல் அடிக்கும் விதமாகத்தான் பேசினார். இதை புரிந்து கொள்ளாத மீனா ரொம்பவே கடுப்பாகிவிட்டார். போதாதருக்கு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜயா, ரோகினி இருவரும் சேர்ந்து மீனாவை நக்கலாக பார்த்து சிரிக்கிறார்கள்.

உடனே கடுப்பான மீனா யாருக்கும் சமைக்க முடியாது யாருக்கு சாப்பிடணுமோ அவர்கள் சமைத்து சாப்பிடுங்கள் என்று கோவமாக பேசி விடுகிறார். நான் எதற்கு சமைக்கணும் என்னால எல்லாம் முடியாது. இனி நான் யாருக்காகவும் சமைக்க முடியாது என்று முடிவு எடுத்து விட்டேன் என்று கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகி ஒட்டுமொத்த குடும்பமும் நிற்கிறார்கள்.

பிறகு சுருதி என்னாச்சு மீனா என்று கேட்கிறார். அதற்கு மீனா மனசு சரியில்ல அதனால என்னால சமைக்க முடியவில்லை என்று சொல்கிறார். உடனே ஸ்ருதி சரி நீங்க ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். அடுத்து மனோஜ் வழக்கம்போல் நான் ஒரு பிசினஸ்மேன் எனக்கு கரெக்டான நேரத்தில் எல்லாம் நடந்த ஆகணும்.

நீங்கள் சமைக்க முடியவில்லை என்று முன்னாடியே சொன்னால் நாங்கள் அதற்கு ஏற்ற மாதிரி பிளான் பண்ணி இருப்போம் என்று ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் மீனாவிடம் சண்டை போடுகிறார்கள். உடனே விஜயா கோபப்பட்டு மீனாவை திட்டுகிறார். ஆனால் மீனா, விஜயாவிடம் கட்டன் ரைட்டாக பேசி முடியவே முடியாது என்று சொல்கிறார்.

இதையெல்லாம் பார்த்த முத்து என்ன ஆச்சு என்று கேட்கும் பொழுது நீங்கள் உங்கள் நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என்ன கல்யாணம் பண்ணி எந்த அளவுக்கு டார்ச்சர் அனுபவிக்கிறார்கள் என்பது மாதிரி பேசினீர்கள். இப்பொழுது எப்படி என்னால சகஜமாக சமைக்க முடியும் இருக்க முடியும் என்று முத்துவிடம் சண்டை போடுகிறார்.

கடைசி வரை முத்து மீனாக்கு மட்டும் குடைச்சல் கொடுத்து இந்த நாடகத்தை உருட்டிக் கொண்டு வருகிறார்கள். ரோகிணி பற்றி எந்த ஒரு விஷயமும் வெளியே வராமல் அவர் நினைத்தபடி தான் ஒவ்வொரு காரியங்களிலும் ஜெயித்துக் கொண்டே வருகிறார். அந்த வகையில் தற்போது இந்த நாடகத்தை பார்ப்பதற்கு சுவாரசியமே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப கதை நகர்ந்து வருகிறது.

சிறகடிக்கும் சீரியலில் நடந்த சம்பவம்

Trending News