Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஆணவமாக வீட்டில் சுற்றிக் கொண்டிருந்த ரோகினி தற்போது பொட்டிப் பாம்பாய் அடங்கி இருப்பதற்கு காரணம் விஜயா தான். விஜயா, ரோகிணியை கண்டித்து பேசியதால் தொடர்ந்து அந்த வீட்டில் கெத்தாக இருக்க முடியவில்லை என்ற காரணத்தினால் ரோகிணி தோழி வீட்டிற்கு சென்று அழுது புலம்பித் தவிக்கிறார்.
என்னதான் வித்யாவும் ஆறுதல் சொன்னாலும், இவ்வளவு போராடி கஷ்டப்பட்டு உன் வாழ்க்கை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததற்கு காரணம் மனோஜ் உன் பக்கம் வரவேண்டும் என்பதற்கு தான். ஆனால் இந்த விஷயத்துக்கு கூட மனோஜ் உன் பக்கம் நிற்காமல் அவங்க அம்மா பேச்சை தான் கேட்டுக் கொண்டிருக்கிறார். மனோஜுக்காக தான் எல்லா விஷயமும் பண்ணி இருக்கிறாய் என்று தெரிந்தும் மனோஜ் உனக்கு சப்போர்ட் பண்ணவில்லை.
அந்த வகையில் இன்னும் உன்னை பற்றிய ரகசியங்கள் எல்லாம் தெரிந்து விட்டால் மனோஜ் நிச்சயமாக உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டார். அதனால் நீ எப்பொழுதுமே உங்க மாமியாரை கைக்குள் போடும் அளவிற்கு பிளான் பண்ணிக்கோ என்று ரோகினிக்கு வித்யா ஐடியா கொடுக்கிறார். இதற்கிடையில் அண்ணாமலை, விஜயாவிடம் ரோகிணி தப்பே பண்ணி இருந்தாலும் அதற்கு கூடவே இருந்து எல்லா காரியத்தையும் பண்ணியது உன்னுடைய மகன் மனோஜ் தான்.
ஆனால் அவனையே நீ மன்னித்து ஏற்றுக் கொண்ட பொழுது ரோகினியையும் மன்னித்து பேசுவது தான் சரியாக இருக்கும் என்று விஜயாவிடம் சொல்கிறார். அது மட்டுமில்ல நீ ஓவராக கண்டித்துக் கொண்டிருந்தாள் மனோஜை கூட்டிக்கொண்டு ரோகிணி தனிக்குடித்தனம் போய்விட்டால் நீ என்ன பண்ணுவ என்று கொஞ்சம் பயமுறுத்தும் அளவிற்கு அண்ணாமலை பேசி விட்டார்.
உடனே விஜயாவும், சரி போனால் போகட்டும் மன்னித்து விடலாம் என்று மனோஜை விட்டு ரோகினிக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்கிறார். அப்படி மனோஜ், ரோகினிக்கு ஃபோன் பண்ணும் பொழுது ரோகினி கோபத்தில் இருப்பதால் ஃபோன் எடுக்கவில்லை. உடனே மனோஜ், வித்யாவுக்கு போன் பண்ணி அம்மா ரோகினிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார். அதனால் ரோகிணி வந்தால் வீட்டுக்கு வர சொல்லுங்க என்று சொல்லி போனை வைத்து விடுகிறார்.
இதைக் கேட்டதும் மாமியார் மனசு இறங்கிவிட்டது என்ற சந்தோஷத்தில் ரோகினி வீட்டுக்கு வருகிறார். வந்ததும் அனைவரும் இருக்கும் பொழுது அண்ணாமலை இனி எந்த விஷயத்தையும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் மறைக்கக் கூடாது. இது ஒரு கூட்டு குடும்பம் நல்லதோ கெட்டதோ அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ணுகிறார். அத்துடன் விஜயா எதுவும் பேசாமல் இருந்ததால் ரோகிணி மற்றும் மனோஜ் செய்த தவறுக்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்கள்.
உடனே விஜயாவும் மன்னித்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்த முத்து, நாட்டாமை சொன்ன தீர்ப்பில் ஒரு குறை இருக்கிறது. தப்பு செய்துவிட்டு காலில் விழுந்து விட்டால் திரும்பவும் அதே தப்ப பண்ண மாட்டாங்க என்பதற்கு என்ன நிச்சயம். அதனால் பண்ண தப்பை சரி செய்ய வேண்டும் என்றால் ஷோரூம் அப்பா பணத்தின் மூலம் தான் ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் இனி அந்த ஷோரூமுக்கு அப்பா தான் ஓனராக இருக்க வேண்டும் என்று முத்து சொல்கிறார்.
இதனை கேட்டதும் ரோகிணி விஜயா மற்றும் மனோஜ் அதிர்ச்சியாகி விட்டார்கள். ஆனால் அண்ணாமலை, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் எனக்கு விருப்பமும் இல்லை. அவங்களை பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். ஆனாலும் முத்து இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதை பார்த்ததும் விஜயா, ரோகினி மற்றும் மனோஜ் தனியாக கூப்பிட்டு பேசுகிறார்.
அதாவது என்னதான் மனோஜ் அப்பாவுக்கு விருப்பமில்லாமல் இருந்தாலும் முத்து கட்டாயப்படுத்தி விட்டால் அந்த ஷோரூம் உங்களை விட்டு போய்விடும். அதனால் இதற்கு ஒரே முடிவு அந்த 27 லட்ச ரூபாய் பணத்தை உங்க மாமாவிடம் சொல்லி அப்பாவிடம் இருந்து வாங்கி கொடுத்து விட்டால் அந்த ஷோரூம் பழையபடி உங்களுடைய கடையாக மாறிவிடும்.
அதனால் சீக்கிரம் பணத்திற்கு ஏற்பாடு பண்ணு என்று ரோகிணி தலையில் பெரிய பாறாங்கலையே தூக்கி போடும் அளவிற்கு விஜயா செக் வைத்து விட்டார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் ரோகிணி வட்டிக்கு பணத்தை வாங்கலாம் என்று மறுபடியும் சிட்டி இடம் கையேந்த போகிறார். ஏற்கனவே சிட்டிக்கும் ரோகிணிக்கும் என்ன சம்பந்தம் என்று கண்டுபிடிக்கும் விதத்தில் முத்து ஆதாரத்தை தேடுகிறார்.
அந்த வகையில் இந்த ஒரு விஷயத்தில் மறுபடியும் முத்து கையில் ரோகிணி சிக்க போகிறார். இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து இனி முத்து கொடுக்கும் டார்ச்சரால் ரோகிணி ஒவ்வொரு நாளும் தவியாக தவித்து அவஸ்தைப்பட போகிறார்.