Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மாமியார் தன்னை அவமானப்படுத்தி பேசியபோதும், குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி அடித்த போதும் மனோஜ் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை தாங்கிக் கொள்ள முடியாத ரோகினி ரூமுக்குள் சென்று ரொம்பவே ஃபில் பண்ணுகிறார். அதே மாதிரி ரோகிணி தன்னை ஒன்னும் தெரியாத, எதற்கும் லாயக்கில்லாத ஒருவராக தான் நினைக்கிறார் என்று மனோஜும் பீல் பண்ணுகிறார்.
இதனால் இவர்கள் இருவருக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால் ரோகிணி, மனோஜிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். அடுத்ததாக ரோகிணி செய்த பித்தலாட்டங்களை பொறுத்துக்க முடியாத விஜயா ஆக்ரோஷமாக உட்கார்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வந்து, இதற்கு தான் யாரையும் ஓவராக நம்பி தலையில் தூக்கி வைத்து ஆடாதே என்று சொன்னேன்.
உனக்கு மீனாவை பிடிக்கவில்லை என்பதால் அவள் என்ன பண்ணாலும் தவறு சொல்லி அவமானப்படுத்தி பேசுவதையே உனக்கு வேலையா போச்சு. இப்பொழுது ரோகிணி பண்ணது தவறாக இருந்தாலும் அதற்கு பங்கு மனோஜ் மேலையும் இருக்கு என்று தெரிந்தும் மனோஜை எதுவும் சொல்லாமல் ரோகிணியை அடித்தது தவறுதான் என்று அண்ணாமலை விஜயாவிடம் சொல்கிறார்.
ஆனாலும் விஜயாவிற்கு, ரோகிணி மீது இருக்கும் கோபம் போகவில்லை. அந்த நேரத்தில் மனோஜ், ரோகினி கோபத்தில் வீட்டை விட்டு போய்விட்டாள் என்று சொல்கிறார். உடனே அண்ணாமலை நீ பார்த்துகிட்டு சும்மா தான் இருந்தியா, போகவிடாமல் தடுக்கலையா என்று கேட்கிறார். இப்பொழுது ரோகிணி எங்கு இருந்தாலும் நீ சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா என்று அண்ணாமலை, மனோஜிடம் சொல்கிறார்.
ஆனால் விஜயா, மனோஜிடம் நீ எங்கேயும் போகக்கூடாது யாரையும் சமாதானப்படுத்த தேவையையும் இல்லை. போனவளுக்கு திரும்பி வர தெரியும், நீ போன் கூட பண்ணி பேசக்கூடாது என்று விஜயா, மனோஜிடம் சொல்லிவிட்டார். மனோஜ் சரி அம்மா என்று சொல்லி தலையாட்டி போய் விட்டார். அடுத்ததாக ரோகிணி, கோவிச்சுக்கிட்டு நேரா அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க.
அவங்க அம்மா ரோகினியை சமாதானப்படுத்தி உன் மாமியாரிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையே பெரிதாகாமல் பார்த்துக் கொள் என திரும்ப வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். வீட்டிற்கு வரும் பொழுது விஜயா ரொம்பவே கோபமாக இருந்ததால் ரோகிணியை மனோஜிடம் திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் மனோஜ் நான் போன் பண்ணியாவது பார்க்கட்டா என்று கேட்கிறார்.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ரோகிணி வீட்டிற்கு வந்து விடுகிறார். ரோகிணியை பார்த்ததும் மனோஜ் பேச போகிறார். ஆனால் விஜயா, மனோஜை ரோகினிடம் பேச விடாமல் தடுத்து விடுகிறார். இதை எல்லாம் பார்த்த ரோகினி ரூம்குள் தனியாக இருக்கும் விஜயாவிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்திடலாம் என்று போய் பேசுகிறார்.
ஆனால் விஜயா சமாதானம் ஆகாமல், நீ என்ன பண்ணுவதாக இருந்தாலும் என்னிடம் சொல்லி இருக்கணும். அதிலும் என் பிள்ளையும் எனக்கு எதிராக திருப்பும் விதமாக அவனையும் என்னிடம் பொய் சொல்லி மறைக்க வைத்தது உன் தவறுதான் என்று திட்டி வெளியே அனுப்பி விடுகிறார். இதனை தொடர்ந்து அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ரோகினியும் சாப்பிட வருகிறார்.
அப்படி டைனிங் டேபிள் சாப்பிட உட்காரும்பொழுது விஜயா, ரோகிணியை உட்கார விடாமல் நாங்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்த பிறகு நீ சாப்பிட்டுக்கோ என்று மீனா பக்கத்தில் நிற்க வைத்து விட்டார். இதுவரை மீனா மட்டும்தான் அந்த மாதிரி எல்லாரும் சாப்பிட்டு முடித்த பிறகு கடைசியாக சாப்பிட்டு வருவார். இப்பொழுது ரோகினிக்கும் அதே நிலைமை தான் என்பதற்கு ஏற்ற மாதிரி விஜயா சொல்லாமல் சொல்லிவிட்டார்.
இந்த மாதிரி ரோகினிக்கு ஒரு விஷயம் நிச்சயம் தேவை தான் என்பதற்கு ஏற்ப இதை தொடர்ந்து விஜயா, ரோகிணியே ஒரு வேலைக்காரி மாதிரி நடத்த வேண்டும். அப்பொழுது தான் ரோகினி செய்த தில்லாலங்கடி வேலைக்கு பதிலடி கிடைத்த மாதிரி இருக்கும். ஆனால் இதோடு விடாமல் அடுத்தடுத்து ரோகிணி ரகசியத்தை கண்டுபிடிக்கும் விதமாக முத்து களத்தில் இறங்கி அவருடைய வேட்டையை தொடர வேண்டும்.
அந்த வகையில் அடுத்து முத்துவின் கண்ணில் சிக்கப்போவது யார் என்றால் ரோகிணியின் மாமா என்று பொய் சொல்லி நடிக்க வந்திருக்கும் கசாப்பு கடை மணிதான். இந்த ஒரு விஷயமும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்துவிட்டால் ரோகிணியின் அத்தியாயம் முடிந்துவிடும்.