வீட்டிற்கு வந்த ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா, அடுத்த வேலைக்காரி ரெடி.. பாட்டி கேட்ட சத்தியம், சைலன்டான கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி சொன்ன பொய்யை ஏற்றுக் கொள்ள முடியாத மனோஜ் குடித்துவிட்டு போலீஸ் இடம் கலாட்டா பண்ண ஆரம்பித்து விட்டார். மனோஜ் நிலைமையை பற்றி மனோஜின் நண்பர் முத்துவிடம் வந்து சொல்லிய நிலையில் அண்ணாமலை முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு மனோஜை கூட்டிட்டு போக வந்து விட்டார்கள்.

ஆனால் அங்கே டிராபிக் போலீஸ் அருண் இருந்ததால் முத்துவுக்கும் அருணுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஆனால் அண்ணாமலை மனோஜின் நிலைமை கண்டு கண்ணீர் வடித்து கலங்கிப் போனதால் அங்குள்ள போலீஸ் பரிதாபப்பட்டு மனோஜை விட்டு விடுகிறார்கள்.

பிறகு வீட்டிற்கு வந்த அண்ணாமலை, மனோஜின் நிலைமை கண்டு வருத்தப்பட்டு பேசிய நிலையில் முத்து மற்றும் அண்ணாமலை இருவரும் சேர்ந்து இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் பாட்டி வந்தால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து விட்டார்கள்.

உடனே அண்ணாமலை நான் போய்க் கூட்டிட்டு வந்து விடுகிறேன் என்று அம்மாவை கூப்பிடுவதற்கு கிளம்பிவிட்டார். அதே மாதிரி பாட்டி வந்தவுடன் விஜயாவும் வீட்டுக்கு வந்து விடுகிறார். பிறகு சுருதி ரவியும் வீட்டுக்கு வந்து விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரோகினியை வீட்டிற்கு வரவழைக்கிறார்கள்.

ரோகிணி வந்ததும் விஜயாவின் கோபம் இன்னும் அடங்கவில்லை என்பதற்கு ஏற்ப நான் கூட்டிட்டு வந்த மருமகள் தான். அதனால் தப்பு பண்ணினால் கண்டிக்கும் உரிமை எனக்கு இருக்கு என்று ஆக்ரோஷத்துடன் ரோகிணியை அடித்து இரண்டு கன்னத்தையும் சிவக்க வைத்து விட்டார்.

ரோகிணி பண்ண தப்புக்கு இது மட்டும் போதாது இன்னும் அனுபவிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப தான் பார்ப்பவர்களுக்கு ஏக்கமாக இருந்திருக்கும் அந்த அளவுக்கு ரோகிணி எல்லாரையும் ஏமாற்றி இருக்கிறார். பிறகு விஜயாவிடம் அடி வாங்கிய ரோகிணி அமைதியாக இருந்த நிலையில் பாட்டி, மீனாவை கற்பூரத்தை எடுத்துட்டு வர சொல்கிறார்.

மீனா, கற்பூர தட்டை எடுத்து வந்தவுடன் பாட்டி இனி இந்த வீட்டுக்கு ஏற்ற மருமகளாக இருப்பேன் என்று சத்தியம் பண்ணு என ரோகினிடம் சொல்கிறார். அத்துடன் அண்ணாமலை இனியும் பொய்யும் பித்தலாட்டமும் பண்ண மாட்டேன் என்று சொல்லி சத்தியம் பண்ண சொல்கிறார். அப்பொழுது அண்ணாமலை இதுவரை மறைத்த விஷயங்கள் அவ்வளவுதானா இன்னும் ஏதாவது எங்களிடம் மறைத்து வைத்திருக்கிறாயா?

அப்படி ஏதாவது விஷயத்தை மறைத்து வைத்திருந்தால் இப்பொழுதே சொல்லிவிடு என்று கோபத்துடன் கேட்கிறார். ஆனால் ரோகிணி, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது ஒரு குழந்தையும் இருக்கிறது என்ற விஷயத்தை சொல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதால் எல்லா உண்மையும் மறுபடியும் மறைத்து பொய் சத்தியத்தை பண்ணி விடுகிறார்.

ஆனால் இனி தான் ரோகிணியின் கொட்டத்தை அடக்கப் போகிறார் விஜயா. மீனா பணக்காரி வீட்டு பொண்ணு இல்லை என்பதற்காக வேலைக்காரி மாதிரி படாபடுத்தி எடுத்தார். அதே மாதிரி தான் ரோகிணியின் நிலைமை ஆகப்போகிறது. ஆனால் இதிலிருந்து ரோகினி தப்பிக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பம் என்ற ஒரு விஷயத்தை வைத்து குடும்பத்தை மறுபடியும் ஆட்டிப் படைக்கப் போகிறார்.

Leave a Comment