புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் விஜயா.. சைடு கேப்பில் ரொமான்ஸில் புகுந்த முத்துவின் அப்பா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து, மீனாவிடம் பேசுவதற்கு முயற்சி செய்து வருகிறார். ஆனால் மீனா, தன்னுடைய தம்பியை அடித்தது தவறு என்பதினாலும் முத்துவின் முரட்டு குணத்தை தண்டிக்கும் விதமாகவும் கோபமாகவே இருக்கிறார். இதற்கிடையில் இவர்களுடைய சண்டையை பெரியதாக்கி வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் என்று விஜயா நினைக்கிறார்.

இது விஷயமாக விஜயா, தோழியிடம் பேசிய பொழுது அனைத்தையும் இவருடைய கணவர் அண்ணாமலை கேட்டுவிட்டார். பிறகு உன்னுடைய மகன் தானே முத்து, அவனுக்கு ஒரு பிரச்சினை என்றதும் அதை போய் சந்தோசமாக தம்பட்டம் அடித்து கொண்டாடுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு விஜயா, அவன் ஒரு ரவுடி, இவள் தெருவில் பூ விக்கிறவ இவர்களுடைய குடும்பச் சண்டை இப்படித்தான் இருக்கும் என்று மட்டமாக பேசுகிறார்.

இதனை அடுத்து ஸ்ருதி, ரவியிடம் சந்தித்த நாள் பார்த்த முதல் நாள் எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி கேட்கிறார். ஆனால் ரவிக்கு எதுவுமே ஞாபகம் இல்லாததால் மாமனார் அண்ணாமலிடம் போய் கேட்கிறார். இவர் விஜயாவை பார்த்த நாள், தேதி, வருஷம் மற்றும் அனைத்து விஷயங்களையும் ஞாபகப்படுத்தி துல்லியமாக கூறுகிறார்.

Also read: 300 எபிசோடை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்கும் ஆசை சீரியலின் ஆட்டநாயகன்.. முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்

பிறகு சுருதி, ரவியை கூட்டிட்டு விஜயாவிடம் கேட்கிறார்கள். இதற்கு விஜயாவுக்கு எதுவுமே தெரியலை ஞாபகமும் இல்லை. பிறகு உங்களைப் பற்றி உங்கள் கணவர் எல்லாத்தையும் ஞாபகம் வைத்துக்கொண்டு விடாமல் சொல்கிறார் என்று சுருதி சொன்னதும் விஜயாவின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் எரிய ஆரம்பித்து விட்டது.

அடுத்து விஜயா மற்றும் அண்ணாமலை அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதை மறந்து ரொமான்ஸில் புகுந்து காதல் நினைவுகளை ஞாபகப்படுத்திப் பார்க்கிறார்கள். அதாவது ஒரு பழமொழி உண்டு பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவார் என்று அதுபோல விஜயா மற்றும் அண்ணாமலையின் ரொமான்ஸ் இருந்தது.

அடுத்ததாக சிட்டி-யால் முத்துவின் நண்பர்களுக்கு பிரச்சனை வருகிறது. இதை சமாளிப்பதற்காக முத்து அவருடைய சொந்த காரை விற்று நண்பர்களை துயரத்தில் இருந்து காப்பாற்றுகிறார். இதன் பிறகு முத்து எதற்காக இதை எல்லாம் பண்ணினார் என்ற விஷயம் மீனாவிற்கு தெரிய வரும் பொழுது இவர்களுடைய சண்டை அனைத்தும் ஒன்னும் இல்லாமல் போய்விடும்.

Also read: தம்பி பேச்சைக் கேட்டு முத்துவை சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. விஜயா ஆசைப்படி பிரிய போகும் ஜோடி

Trending News