வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ரோகிணியை விட மோசமான வேலையை பார்க்கும் விஜயா.. ஏமாற்றத்தில் மீனா, புது அவதாரம் எடுக்கும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் உளரிய விஷயங்களை முத்து லாக்கப்பில் இருந்து வீடியோ எடுத்து விடுகிறார். பிறகு வீட்டிற்கு போன முத்து, கையில் வைத்திருந்த வீடியோவை டிவியில் போட்டு அனைவரையும் பார்க்க வைக்கிறார். ஆக மொத்தத்தில் அந்த வீடியோவில் நாலு லட்ச ரூபா பணத்தை ஏமாந்தது தெரிய வந்துவிட்டது.

ஆனால் அந்த நான்கு லட்சம் பணத்தை எப்படி சரி செய்தார் என்று முத்து கேள்வி கேட்கும் பொழுது மனோஜ் உண்மையை சொல்ல வருகிறார். இதை பார்த்த விஜயா, எங்கே மனோஜ் உண்மையா உளறி நாம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தினால் மனோஜை திட்டி அடித்து திசை திருப்பி விட்டார். அப்பொழுது மனோஜ் நான் தெரிந்த நண்பரிடம் கடன் வாங்கி சமாளித்தேன் என்பதை சொல்லி பூசி முழுகி விட்டார்.

தில்லாலங்கடி வேலையை பார்க்கும் விஜயா

ஆனால் இதில் முத்துவுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் படி எப்படி கவரிங் நகையே மாற்றினார் என்பதை மனோஜ் வாயால் சொல்ல வைக்கணும் என்று யோசிக்கிறார். அப்பொழுது மீனா ஐடியா கொடுக்கிறார், அதாவது வெற்றிலையில் மை வைத்து தடவிப் பார்த்தால் யாரு கவரி நகை மாற்றினார் என்று கண்டுபிடிக்கலாம் என சொல்கிறார்.

இப்படி மீனா பேசிக் கொண்டிருக்கும் பொழுது முத்துவுக்கு புதிதாக ஒரு ஐடியா வந்துவிட்டது. அதன்படி கோவிலில் இருந்து கிளம்பும்போது நெற்றி நிறைய பட்டை, கையில் எலுமிச்சம் பழம் என எடுத்துட்டு வீட்டுக்கு வருகிறார். வந்தவுடன் மாந்திரீகம் மூலம் யார் நகையை எடுத்தார் என்பது போல் ஒரு ட்ராமாவை நடத்தி மனோஜ்க்கு பயம் காட்டப் போகிறார்.

மனோஜ் பொருத்தவரை மக்கு மட்டுமில்லாமல் ஒரு பயந்த சுபாவம் கொண்டவர். அதனால் இந்த பயத்தை வைத்து முத்து, மனோஜ் வாயாலே உண்மையை வர வைக்கப் போகிறார். ஆனாலும் இந்த விஜயா, ரோகிணி விட டபுள் மடங்கு தில்லாலங்கடி வேலையை பார்த்து பொய் பித்தலாட்டம் பண்ணி குடும்பத்தையே ஏமாற்றி வருகிறார். அந்த வகையில் ரோகிணி மற்றும் விஜயா இருவருமே ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான்.

அதனால் தான் மனோஜ் உண்மையை சொல்லிட கூடாது என்று மட்டமாக திசை திருப்பி விட்டார். இருந்தாலும் முத்து யாரையும் விடுவதாக இல்லை, முத்து செய்யப்போகும் அக்கப் போர்த்தனம் விஜயாவின் முகத்திரை கிழியப்போகிறது.

அத்துடன் அண்ணாமலை கொடுக்கும் சவுக்கடியால் விஜயா கதி கலங்கி நிற்கப் போகிறார். தன் மனைவியை இப்படி பழி சுமத்தி குடும்பத்தையும் அவமானப்படுத்திய விஜயாவிற்கு சரியான பாடத்தை கற்பிக்க முத்து புது அவதாரத்தை எடுத்து உண்மையை கண்டுபிடிக்க போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News