வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

போலீஸ் வேடத்தில் விஜயகாந்த் மிரட்டிய 11 படங்கள்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். ஆனால் ரசிகர்கள் பொருத்தவரை அதிகம் விரும்பியது விஜயகாந்த் நடித்த போலீஸ் கதாபாத்திரம் தான். ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் தத்துரூபமாக போலீஸ் அதிகாரியாக படத்தில் நடித்து பல கோடி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். அப்படி போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்களைப் பற்றி பார்ப்போம்.

#1. ஊமை விழிகள்

விஜயகாந்த், கார்த்திக் நடித்த திரைப்படம் ஊமை விழிகள். இந்தப் படம் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இசை ஆபாவாணன், மனோஜ் க்யான் அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தது.

#2. மாநகர காவல் 

விஜயகாந்துக்கு படு ஸ்டைலாக போலீஸ் கதாபாத்திரமாக அமைந்த படம் மாநகரக் காவல். இந்த படத்தில் சந்திரபோஸ் இன்னொரு ஹீரோ. சண்டை காட்சிகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கும். மிகப்பெரிய வெற்றிப்படம்.

#3 தர்மம் வெல்லும்

தர்மம் வெல்லும் விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடித்த படம் ஜோடியாக கௌதமி நடித்திருப்பார். சுஜாதா முக்கியமான ரோலில் நடித்து இருப்பார். படம் சுமாரான வெற்றி.

#4. கேப்டன் பிரபாகரன்

வீரப்பன் கதையை மையமாக வைத்து எடுத்த படம் கேப்டன் பிரபாகரன். வீரப்பன் கதாபாத்திரத்தில் மன்சூரலிகான் நடித்திருப்பார். இந்தப் படத்திற்கும் இசை இளையராஜா. சரத்குமார் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

#5. வீரம் வெளஞ்ச மண்ணு

விஜயகாந்த் மீண்டும் இரண்டு வேடங்களில் நடித்த படம் வீரம் வெளஞ்ச மண்ணு. ஜோடியாக குஷ்பு, ரோஜா இருவரும் நடித்திருப்பார்கள். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

#6. சேதுபதி IPS

விஜயகாந்த், மீனா நடித்த படம் சேதுபதி ஐபிஎஸ். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படம். இசை இளையராஜா. சில சண்டை காட்சிகளை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்திருப்பார்கள்.

#7. தாய்மொழி

விஜயகாந்த், சரத்குமார் நடித்த படம் தாய்மொழி. இந்த படத்தில் விஜயகாந்த் போலீசாக வருவார். ஆனால் அதிகமான காட்சிகள் கிடையாது. சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

#8. சத்ரியன்

விஜயகாந்துக்கு ஒரு மைல்கல் படம் என்றால் அது சத்ரியன். இந்த படத்தை வைத்து தான் தற்போது விஜய் நடித்த தெறி படம் வந்தது. இந்த படத்தின் வில்லன் மிகவும் கொடூரமாக நடித்திருப்பார். இசை இளையராஜா பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம்.

#9. ஆனஸ்ட் ராஜ்

விஜயகாந்த், கௌதமி நடித்த படம் ஆனஸ்ட்ராஜ். கூட இருக்கும் நண்பன் செய்யும் துரோகத்தால் பாதிக்கப்படும் கதாநாயகி பற்றிய படம். மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இந்தப் படம் மிகப் பெரும் தோல்வியடைந்தது.

#10. வல்லரசு

வல்லரசு விஜயகாந்த் தற்போதுள்ள ரசிகர்களுக்காக எடுத்த படம் இந்தப்படமும் நன்றாக ஓடியது. இந்தப் படத்திற்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார். இசை தேவா.

#11. வாஞ்சிநாதன்

வாஞ்சிநாதன் விஜயகாந்துக்கு சறுக்கல் ஏற்படுத்திய படம். மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்த தோல்வியடைந்தது.

Trending News