செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

விஜயகாந்தை வைத்து 7 படங்கள் இயக்கிய பிரபலம் யார் தெரியுமா?  அதிலும் 5-க்கு மேல சூப்பர் டூப்பர் ஹிட்

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் விஜயகாந்த். அப்போது விஜயகாந்திற்கு கோடான கோடி ரசிகர்கள் இருந்தனர்.

அப்போதெல்லாம் விஜயகாந்தின் படம் திரையரங்கில் வெளியானால் போதும் மற்ற நடிகர்களின் படங்கள் எதுவுமே வெளியாகாது. அந்தளவிற்கு தனக்கென தனி  ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை வைத்திருந்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த் எப்போதுமே அவரது படங்களில் நல்ல கருத்துக்களை கூறி நடித்திருப்பார்.  அப்போதெல்லாம் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் என்றால் அது சுந்தரராஜன் தானாம்.

vijayakanth sundar rajan
vijayakanth sundar rajan

சுந்தரராஜன் விஜயகாந்தை வைத்து 7 படங்கள் இயக்கியுள்ளார். ஆக்ஷன் ஹீரோவாக சினிமாவில் வலம் வந்த விஜயகாந்தை அப்படியே காதல் ஹீரோவாக மாற்றினார் சுந்தர்ராஜன்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இருவரும் கொடி கட்டிப் பறந்தனர். 1984ஆம் ஆண்டு வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் இவர்களது கூட்டணியில் வெளியாகி சக்க போடு போட்டது.

அதன் பிறகு 1986ஆம் ஆண்டு அம்மன் கோயில் கிழக்காலே படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய  வரவேற்பை பெற்றது. பின்பு தழுவாத கைகள், காலையும் நீயே மாலையும் நீயே, எங்கிட்டமோதாதே போன்ற படங்கள் வெற்றி பெற்றன. 

1994-ஆம் ஆண்டு என் ஆசை மச்சான் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேபோல்  1995 ஆம் ஆண்டு காந்தி பிறந்த மண் என்ற படம் இவர்கள் இருவருக்கும் பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது.

- Advertisement -spot_img

Trending News