சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

உச்சத்தில் இருக்கும்போது விஜயகாந்தை ஒதுக்கிய பாக்கியராஜ்.. பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட கேப்டன்

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் திரைப்படங்களில் நடித்த பொழுது எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அவருடன் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் உணவு வழங்குவது மற்றும் அவரது நலன்களில் அக்கறை கொள்வதாக இருப்பவர்.

கேப்டனின் திரைத்துறைக்கு வந்த ஆரம்பத்தில் இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என பாக்யராஜ் ஆசைப்பட்டார். பாக்யராஜ் இயக்கிய கன்னிப்பருவத்திலே படத்தில் மாடுபிடி வீரராக விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேப்டனிடம் அட்வான்ஸாக 500 ரூபாய் கொடுத்து படப்பிடிப்பிற்கு வாருங்கள் என்று பாக்யராஜ் சொல்லியிருந்தார்.

கன்னிப்பருவத்திலே படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜகண்ணு இப்படத்தில் விஜயகாந்த் வேண்டாம் ராஜேஷை போடுங்கள் என்று கூறியுள்ளார். இதை விஜயகாந்திடம் எப்படி சொல்வது என்ன பாக்யராஜ் தயக்கத்துடன் ராஜேஷ் வைத்து இந்த படத்தை இயக்குகிறேன். நாம் இருவரும் அடுத்து வேறு ஒரு படம் பண்ணலாம் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.

விஜயகாந்த் உடனே பரவாயில்லை என்று சொல்லிவிட்டு அட்வான்ஸ் 500 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டாராம். பிறகு விஜயகாந்த் நிறைய படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தபோது மீண்டும் தயக்கத்துடன் பாக்யராஜ் கேப்டனிடம் படம் பண்ணலாமா என கேட்டுள்ளார். கேப்டன் அவ்வளவு பிஸியாக இருந்தாலும் பழைய விஷயங்களை நினைக்காமல் சொக்கத்தங்கம் படத்தில் நடித்துக் கொடுத்தார்.

விஜயகாந்த் நடித்த படங்கள் நஷ்டம் ஏற்பட்டால் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்வாராம். நடிகர் ஜெய்சங்கர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்த சமகால நடிகர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஜெய்சங்கர் படம் தோல்வி அடைந்தால் அவரும் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்வாராம்.

முன்னணி நடிகர்களான விஜய், அஜித் படங்கள் நஷ்டமானால் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள மாட்டார்களாம். அதற்கு பதிலாக அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு வேறொரு படம் நடித்து கொடுப்பார்களாம். தான் நடிக்கும் படங்களில் தயாரிப்பு நிறுவனம் நஷ்டம் அடைந்தால் அதற்கு தாமும் பொறுப்பு என்று தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளும் பெருந்தன்மையான மனமுடையவர் விஜயகாந்த்.

Trending News