ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம்.. அதிர்ச்சியை கிளப்பிய கேப்டனின் தற்போதைய நிலை

Vijayakanth : சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே தனது சிறந்த பங்களிப்பை கொடுத்தவர் தான் விஜயகாந்த். மேலும் சினிமாவில் இப்போது பல நட்சத்திரங்கள் ஜொலிப்பதற்கு விஜயகாந்த் ஒரு முக்கிய காரணம். தன்னை தேடி வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை விஜயகாந்த் செய்யக்கூடியவர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் உடல்நல குறைவால் மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறார். இந்த நிலைமையை ரசிகர்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இப்போது கேப்டனின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வந்திருக்கிறது.

அதாவது கடந்த பதினெட்டாம் தேதி விஜயகாந்துக்கு திடீரென உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட மியாட் மருவத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரண்டு நாட்களாகவே மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சூழலில் இன்று விஜய்காந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

Also Read : வளர்த்த கடா உயர்வது பொறுக்காத விஜயகாந்த்.. இன்றுவரை கேப்டன் மேல் உள்ள ஒரே கரும்புள்ளி

ஏனென்றால் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந் நிலையில் இப்போது செயற்கை சுவாசம் விஜயகாந்த்-க்கு கொடுக்கப்பட்டு வருகிறதாம். இதை அறிந்த ரசிகர்கள் விஜயகாந்த் சீக்கிரம் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனை செய்த வருகிறார்கள்.

மேலும் சளி, இருமலால் தான் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவ்வப்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். ஆகையால் இந்த பிரச்சனை சீரான உடன் விரைவில் விஜயகாந்த் வீடு திரும்பிவிடுவார் என மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. ஆகையால் அவரது உடல்நிலை குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்று கேப்டன் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

Also Read : 80, 90களில் கமலுக்கு டஃப் கொடுத்த விஜயகாந்த்.. ஒரே நாளில் விடாமல் 22 தடவை மோதிய கேப்டன்

Trending News