வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்.. கேப்டனுக்கு என்னாச்சு?

கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். கம்பீரமாக இருந்த விஜயகாந்த் சில வருடங்களாக உடல்நிலை பிரச்சனையால் சிகிச்சை பெற்று வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

விஜயகாந்துக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தைராய்டு பிரச்சினையால் மிகுந்த அவதிப்பட்டு வந்தார். மேலும் ஹார்மோன் பிரச்சனையால் ஞாபக சக்தியும் குறைந்து கொண்டே வந்தது. அமெரிக்கா சென்று சிகிச்சைக்கு பிறகு ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அவருடைய புகைப்படம் வெளியாகி திரை உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதாவது உடல் மெலிந்து போன தோற்றத்துடன் இருந்தார். இதனால் திரைத் துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர்.

உதவி என்று கேட்டால் இல்லை என்று சொல்லாத அவருக்கா இந்த நிலைமை என தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர். மேலும் அரசியலிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேதிமுக கட்சியினர் போட்டியிடவில்லை. இந்நிலையில் அவரது குடும்பம் அவ்வப்போது விஜயகாந்தின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஆறுதல் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுயுள்ளார் என்ற செய்தி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் வழக்கமான பரிசோதனைக்காக தான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தேதிமுக கட்சி தலைமையில் இருந்து அறிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜயகாந்த் பூரண நலம் பெற்று மீண்டும் பழைய கம்பீரத்துடன் வரவேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Trending News