தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவிற்கு நிறைய நல்ல காரியங்களைச் செய்துள்ளார். நடிகர் சங்கத் தலைவராக இருந்து அவர் செய்த பல விஷயங்களை இன்றும் பல நடிகர்கள் பல பேட்டிகளில் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவில் நினைத்த உயரத்தை அடைந்த விஜயகாந்த் அரசியலிலும் கிட்டத்தட்ட தான் நினைத்த இடத்தை அடைந்துவிட்டார். ஆனால் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கருணா என்பதைப்போல தற்போது அரசியலிலும் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டார்.
விஜயகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மூன்று நடிகைகளை காதலித்துள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. விஜயகாந்த் காதலித்தது உண்மைதான் என சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
![vijayakanth-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/06/vijayakanth-cinemapettai.jpg)
விஜயகாந்தின் ஆரம்ப காலகட்டங்களில் அறிமுகப் படங்களில் நடித்தவர் நடிகை பத்மா பிரியா. இவருக்கு சென்னையில் கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு சொந்தமாக ஒரு வீடு வாங்கி கொடுத்துள்ளாராம் விஜயகாந்த்.
அதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் தூரத்து இடி முழக்கம் படத்தில் நடித்தவர் பூர்ணிமா. விஜயகாந்தை காதலித்த பூர்ணிமாவுக்கும் அதே பகுதியில் ஒரு பெரிய பங்களா வாங்கி கொடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் சொந்தமாக பெட்ரோல் பங்க் ஒன்றையும் வைத்து கொடுத்து பத்திரமாக பாதுகாத்து வந்தாராம்.
அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், ராதிகா கதை ஊரறிந்ததே. விஜயகாந்தை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ராதிகா செய்த விஷயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இருந்தாலும் ராதிகாவுக்கு விஜயகாந்த் எட்டாக்கனியாகவே இருந்து விட்டார். கடைசியாகத்தான் பெற்றோர்கள் பார்த்த பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலானார் விஜயகாந்த். இந்த தகவலை ஒரு வீடியோவில் ஓபன் ஆகவே தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.