வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பணம் சம்பாதிக்க தான் அரசியலுக்கு வந்தீர்களா? நெத்தியடி பதிலளித்த கேப்டன்

90களில் தமிழ் சினிமாவில் 156 படங்களுக்கு மேல் நடித்து கேப்டன் என ரசிகர்களால் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த், ஆரம்பத்தில் அரசியலுக்கு வந்த சமயத்தில் கேப்டன் விஜயகாந்த் மீது நிறைய கேள்விக் கணைகள் வைக்கப்பட்டது.  சினிமாவில் சம்பாதிப்பது பத்தாது அரசியலும் வந்து சம்பாதிக்க பார்க்கிறார் என பலரும் இவரை விமர்சித்தனர்.

இவரது குறிக்கோள் பணம் தான் என்று பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால் அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கும் விதமாக கேப்டன் விஜயகாந்த் பல நல்ல பணிகளை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு உதவி செய்து வந்தார்.

பள்ளி மாணவி ஒருவர் விஜயகாந்திடம்,’ நீங்கள் பிரபலமாகவும் பணம் சம்பாதிக்க தான் அரசியலுக்கு வந்தீர்களா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு விஜயகாந்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆனால் அதற்கு விஜயகாந்த் புத்திசாலி தனமான ஒரு பதிலைச் சொல்லி அசத்தினார்.

நான் நாட்டு மக்களுக்கு உதவி செய்யவே வந்துள்ளேன். உன்னைப் போன்ற ஒரு குழந்தையை படிக்க வைக்க என்னால் முடியும். ஆனால் உன்னை போன்று நிறைய குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமானால் அதற்கு அரசியல் தான் சிறந்த வழி என்று ஒரு பதிலைச் சொன்னார்.

1993ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்தின் ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டு பலர் வென்றனர். அதன்பிறகு அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் வெளிப்பட்ட 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் துவங்கி அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

உண்மையில் விஜயகாந்த் கூறியவாறு அரசியலில் நடந்துகொண்டார் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால் அவரது உடல்நிலையும் கெட்ட பழக்கங்களும் அவரை அரசியலில் படு பாதாளத்திற்கு தள்ளியது. அவருடைய மனைவி பிரேமலதா கணவருடைய அரசியல் பயணத்தில் தோள்கொடுத்து உறுதுணையாக நின்றாலும் விஜயகாந்த் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இந்த கட்சி வளர்ந்திருக்கும்.

Trending News