வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் மிரட்டிய 7 ஹிட் படங்கள்.. அந்த கம்பீரத்துக்கு இவர் ஒருத்தர்தான் ராஜா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். கேப்டன் போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படங்கள். தனது கம்பீரமான நடிப்பில் வெள்ளி விழா கண்ட படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

ஊமைவிழிகள்: இராம நாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த் முதலாவதாக போலிசாக சிவந்த கண்கள் திரைப்படத்தில் நடித்திருப்பார். அதற்குப்பின் 1986 இல் வெளிவந்த ஊமைவிழிகள் திரைப்படத்தில் விஜயகாந்த போலீசாக நடித்து இருப்பார். இப்படத்தில் கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, மலேசியா வாசுதேவன் நடித்திருந்தார்கள். இப்படம் 175 நாள் ஓடி வெள்ளி விழா கண்டது.

மாநகரகாவல்: இந்த திரைப்படம் விஜயகாந்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இப்படத்தில் பிரதமரை படுகொலையில் இருந்து காப்பாற்றும் அதிகாரியாக நடித்திருப்பார்.இப்படத்தில் ஸ்டைலாகவும், அதிக சண்டை காட்சிகளும் இருக்கும். கேப்டனுக்கு மாநகரகாவல் படமும் வெற்றிப் படமாக அமைந்தது.

தர்மம் வெல்லும்: இரட்டை வேடங்களில் விஜயகாந்த் நடித்த படம் தர்மம் வெல்லும் இவருக்கு ஜோடியாக கௌதமி, சுஜாதா நடித்திருப்பார்கள். 1991இல் விஜயகாந்தின் நூறாவது படம் கேப்டன் பிரபாகரன்.வீரப்பன் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் மன்சூரலிகான் நடித்திருப்பார். இப்படத்தின் இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார்.

வீரம் வெளஞ்ச மண்ணு: இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் விஜயகாந்த். இப்படத்தில் குஷ்பூ, ரோஜாவும் ஜோடியாக நடித்து இருப்பார்கள். பி வாசுவின் இயக்கத்தில் சேதுபதி ஐபிஎஸ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் விஜயகாந்த். அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, செந்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது.

சத்ரியன்: இந்த படத்தில் மிகப் பெரிய பிரம்மாண்டமான வெற்றியடைந்தது. இப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் திலகன் எல்லோராலும் பேசப்பட்டார். இப்படத்தில் ரேவதி, பானுப்பிரியா, விஜயகுமார் நடித்திருந்தனர்.

புலன் விசாரணை: கமாண்டோ என்ற ஹாலிவுட் படத்தை சரிவிகிதத்தில் கலந்து எடுத்த படம் தான் புலன் விசாரணை. இப்படத்தை செல்வமணி இயக்கியுள்ளார். இப்படத்தில் ரூபினி, நம்பியார், ராதாரவி, ஆனந்தராஜ், சரத்குமார் போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படம் 150 நாட்களை தாண்டி மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனஸ்ட்ராஜ்: 1994 ஆம் ஆண்டு ஆனஸ்ட்ராஜ் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் உயிருக்கு உயிராக நினைத்த நண்பனின் துரோகத்தை விஜயகாந்த் தத்ரூபமாக நடித்து இருப்பார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கவுதமி நடித்து இருப்பார்.

Trending News