இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் கேப்டன் விஜயகாந்த். ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் வில்லனாக நுழைந்தவருக்கு ஔியேற்றி நாயகனாக்கிய படம் “அகழ் விளக்கு”.
ரஜினி கமல் வருடத்திற்கு சில படங்களை வெளியிட்டு செம பீக்கில் இருந்த அதே தருணத்தில் சைலண்டாக ஒரு ஆக்சன் ஹீரோ உருவாகிக்கொண்டிருந்தார் அவர் தான் கேப்டன்.
விஜயராஜ் என்கிற பெயரில் இருந்த கேப்டனுக்கு விஜயகாந்த் என பெயர் மாற்றத்தோடு திரை அறிமுகமும் தந்தவர் இயக்குனர் ஏ.காஜா தான். முதல் படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஸ்டில்களை இணையத்தில் பதிவேற்றி வைரலாக பரவி வருகிறது விஜயகாந்த் புகைப்படங்கள்.
அதிரடியான பல்வேறு படங்களை நடித்து வளர்ந்த கேப்டனுக்கு கேப்டன் என்கிற பெயரை பெற்று தந்தது நடிகை ரோஜாவின் கனவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படம் தான்.
திரை உலகில் பெரும் ரசிகர் பட்டாளமே வைத்திருந்த விஜயகாந்த சினிமாவில் கமல் ரஜினி என்கிற ஜாம்பவான்கள் இருக்கும் போதே என்ட்ரி கொடுத்தது போலவே கலைஞர் மற்றும் அம்மா என்கிற அரசியல் ஆளுமைகள் இருந்த அதே தருணத்தில் தமிழ் நாடு அரசியலில் நுழைந்தார்.
தனியாக நின்றவருக்கு தோல்வி கிடைத்தாலும் அடுத்ததாய் அம்மாவுடன் கூட்டணியில் நின்றவருக்கு சட்டமன்றம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று “எதிர்கட்சி” தலைவராகவும் ஆக்கியது என்றால் மிகையாகாது.
இப்போது தலைவரின் பிறந்தநாளை தொண்டர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் பதிவேற்றிய பழைய புகைப்படங்களை நெட்டிசன்கள் பலரும் அதிவேகமாய் பகிர்ந்து வருகின்றனர்.