வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பையனை தூக்கி விட வெளியே வரும் விஜயகாந்த்.. தேர்தலுக்கான யுத்தியா என பரபரப்பு

Actor Vijayakanth: சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் மக்களின் அபிமானத்தைப் பெற்று உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர் தான் விஜயகாந்த். தற்பொழுது இவரை வைத்து இவரின் மகன் செய்யப் போகும் சம்பவம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

80 காலகட்டத்தில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி கதாநாயகனாய் நடித்து வெற்றி கண்டவர் கேப்டன் விஜயகாந்த். இவரின் எண்ணற்ற படங்கள் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்திருக்கிறது.

Also Read: 2வது முறையும் அவருடன் பாடும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்.. ஒத்திகை பார்க்கும் பொழுது ஏற்பட்ட சங்கடம்

அதன்பின் சினிமாவில் இடைவெளி விட்டு காணப்பட்ட இவர் அரசியலில் ஈடுபட்டார். அவ்வாறு நல்லா போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில், திடீர் உடல்நிலை காரணமாக அனைத்தையும் விட்டுவிட்டு தற்பொழுது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்.

இவரின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டு மக்கள். அவ்வாறு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியில் வருவதை தவிர்க்கும் இவரின் அனைத்து கூட்டங்களையும் மனைவி பிரேமலதா பார்த்து வருகிறார்.

Also Read: 2028 இல் வெளிவர உள்ள லோகேஷன் கடைசி படம்.. ஆண்டவரிடம் சரணாகதி அடையும் பிரம்மாண்ட கணக்கு

இனி இவரை பார்க்கவே முடியாது என யோசித்து வந்த மக்களுக்கு நற்செய்தியாய் தற்பொழுது கேப்டன் முகம் காட்டப் போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இவரின் மகனான சண்முக பாண்டியன், நடிப்பை மேற்கொண்டு வருகிறார். இவர் மேற்கொள்ளும் படத்தின் தலைப்பை அறிவிக்க கேப்டன் வெளியே வரப்போகிறாராம்.

தன் தந்தையின் மூலமாகத்தான் இதை செய்ய வேண்டும் என உறுதியாக கூறியதன் காரணமாக மகனின் ஆசையை நிறைவேற்ற விஜயகாந்த் தற்போது முகம் காட்ட தயாராக இருக்கிறாராம். இதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் அவரை காண ஆவலாக உள்ளனர். மேலும் இவை அரசியல் ரீதியாக தேர்தலுக்கு போடும் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

Also Read: அடுத்த நான்கு மாதங்களுக்கு தியேட்டரை அலங்கரிக்க வரும் 10 படங்கள்.. ஆயிரம் கோடி லாபத்திற்கு அடி போடும் லோகேஷ்

Trending News