திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரபல நடிகையை உருகி உருகி காதலித்த கேப்டன்.. அதே மாதிரியே பெண்ணை திருமணம் செய்து வைத்த ராவுத்தர்

ஒரு படத்தில் நடிக்கும் பொழுது நடிகர், நடிகைகளுக்கு இடையே காதல் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று. சில காதல் வதந்தியாகவே இருந்து விடும். ஒரு சில காதல் திருமணம் வரை கூட சென்று நின்று இருக்கிறது. சினிமாவில் காதலிப்பவர்களில் பத்தில் ஒருவர் தான் திருமணம் செய்து கொள்வார்கள். மற்றவை எல்லாம் அவர்களின் நிறைவேறாத காதலாக தான் இருக்கும்.

இப்படிப்பட்ட நிறைய காதல் தமிழ் சினிமாவில் இருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களால் புரட்சி கலைஞர், கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த்திற்கும் அந்த காலகட்ட சினிமாவில் காதல் இருந்திருக்கிறது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் சுய காரணங்களால் இந்த காதல் கைகூடாமல் போயிருக்கிறது. இதனால் அவர் ரொம்பவும் மனம் நொந்து போயிருக்கிறார்.

Also Read:பக்காவான கெமிஸ்ட்ரி, விஜயகாந்தை ரொமான்ஸ் செய்து கிறங்கடித்த 5 நடிகைகள்.. ‘ரா’-னு வந்தாலே கிறங்கி விழும் கேப்டன்

தமிழில் நீதியின் மறுபக்கம் என்னும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக விஜயகாந்துடன் ஜோடி சேர்ந்தவர் தான் நடிகை ராதிகா. அதற்கு முன்னாலேயே ராதிகாவுக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் விஜயகாந்தின் தோற்றத்தை காரணம் கூறி நடிக்க மறுத்து விட்டாராம். அதன் பின்னர் விஜயகாந்த் ஒரு மிகப்பெரிய ஹிட் ஹீரோவாக மாறவும் அடுத்தடுத்து ராதிகா அவருடன் படங்களில் கமிட்டாக ஆரம்பித்தார்.

தொடர்ந்து இருவரும் சேர்ந்து படங்கள் பண்ணியதால் இருவருக்குள்ளும் நல்ல நெருக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். சினிமாவில் விஜயகாந்த்தை வேறு ஒரு பரிமாணத்தில் மாற்றியது ராதிகா தான் என்று கூட சொல்கிறார்கள். ராதிகா அவரை பயங்கர ஸ்டைலாக மாற்றினாராம். நாளுக்கு நாள் இவர்கள் நெருக்கம் அதிகரிக்க இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்து இருக்கிறார்கள்.

Also Read:நட்புக்காக பிடிக்காத இயக்குனரின் படத்தில் நடித்த விஜயகாந்த்.. ஹிட் கொடுத்து வாய் அடைக்க வைத்த சம்பவம்

ஆனால் விஜயகாந்தின் குடும்ப உறுப்பினர்கள் இந்த காதலுக்கு கடைசி வரை மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் ஜாதகம் பார்த்து அதுவும் செட் ஆகவில்லை என்று திருமணத்தை நிறுத்தியதாக கூட தகவல்கள் இருக்கின்றன. ராதிகா இவர்களுடைய திருமணத்திற்காக திருமண புடவை முதற்கொண்டு வாங்கிய பிறகு தான் இந்த திருமணம் நின்றதாம். இதனால் விஜயகாந்த்தாக இருக்கட்டும், நடிகை ராதிகாவாக இருக்கட்டும் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார்கள்.

அதன்பின்னர் விஜயகாந்த் அவருக்கு பார்க்கும் பெண்ணை எல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். கடைசியில் அவருடைய நெருங்கிய நண்பர் ராவுத்தர் பார்த்த பெண்தான் பிரேமலதா விஜயகாந்த். அவர் பார்ப்பதற்கு சாயலில் ராதிகா போல் இருந்ததால் அவரை ஓகே செய்த ராவுத்தர். ராதிகாவை போன்றே மேக்கப் போட்டு அந்த புகைப்படத்தை விஜயகாந்த்திடம் காட்டி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி இருக்கிறார்.

Also Read:விஜயகாந்தின் தற்போதைய மோசமான நிலைமைக்கு காரணம் அவரே.. பகிர் சம்பவங்களை கூறிய பிரபலம்

Trending News