வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஏக்கத்துடன் இருந்த வடிவேலுவை தூக்கி விட்ட விஜயகாந்த்.. நன்றியை மறந்து அசிங்கப்படுத்திய கொடுமை

Actor Vijaykanth and Comedian Vadivelu: நகைச்சுவை நடிகருக்கு எத்தனை பேர் தான் போட்டி போட்டு வந்திருந்தாலும் இவர் இடத்திற்கு யாராலையும் வர முடியாது என்று சொல்லும் அளவிற்கு உச்சாணி கொம்பில் இருப்பவர் தான் வடிவேலு. அப்படிப்பட்ட இவருக்கு ஆரம்ப காலத்தில் கேப்டன் விஜயகாந்த் தான் ஏராளமான உதவிகளை செய்து கைத்தூக்கி விட்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் ஏதாவது ஒரு சில காட்சிகளிலாவது நம்முடைய முகம் டிவியில் தெரியாதா என்று ஏக்கத்துடன் இருந்த இவரை தூக்கி விட்டவரே விஜயகாந்த் தான். வாய்ப்புகள் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்த நிலையில் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இவருக்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று இயக்குரிடம் விஜயகாந்த் கேட்டிருக்கிறார்.

Also read: டபுள் பேமெண்ட், ரெகுலர் சான்ஸ், வடிவேலு விரித்த வலை.. விவேக் குரூப்பை பிரிக்க போட்ட சதி

அப்பொழுது கவுண்டமணி செந்தில் இருந்ததால் இவருக்கு வேற எந்த வாய்ப்புகளும் இல்லை என்று சொல்லிவிட்டார். அப்பொழுது விஜயகாந்த் தான் சும்மா பரவாயில்லை எனக்கு குடை பிடித்துக் கொண்டிருக்கும் காட்சிகளில் என் கூடவே இருப்பது போல் கதை அமைத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அப்படித்தான் இவருடைய முகமே பலருக்கு பிரபலமாகி வந்தது.

இந்தப் படத்திற்கு பிறகு தான் படிப்படியாக ஏராளமான வாய்ப்புகள் வர ஆரம்பித்து ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு நாம் வளர்ந்து விட்டோம் என்ற கர்வத்தால் பலரையும் மதிக்காமல் அத்துடன் இவருக்கு கீழே இருப்பவர்களை வளர விடாமலும் செய்வதுதான் இவருடைய குணமாகவே இருந்தது.

Also read: விஜயகாந்த் பெயர் சொன்னதால் வாய்ப்பு தர மறுத்த வடிவேலு.. தூக்கிப் போட்டு மிதித்து இருப்பேன்!

அதோடு மட்டுமில்லாமல் இவரை தூக்கி விட்ட விஜயகாந்தை மதிக்காமல் அவருக்கு போட்டியாக ஒவ்வொரு விஷயங்களையும் செய்ய தொடங்கி விட்டார். அதுவும் எந்த அளவிற்கு என்றால் விஜயகாந்த் விட மேலே வர வேண்டும் என்பதுதான் இவருடைய குறிக்கோளாகவே இருந்தது. அத்துடன் விஜயகாந்த் உடன் இருந்த சிலருக்கு ஏதாவது வாய்ப்புகள் வந்தால் கூட அதை தடுக்கும் விதமாக இவர் போய் நின்று இருக்கிறார்.

அதனால் தான் என்னமோ கெடுதல் செய்ததினால் பத்து வருடமாக சினிமாவில் தலை காட்ட முடியாமல் போய்விட்டது. திரும்பி வந்தாலும் இவருக்கு சொல்லும் படியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதை நேரத்தில் விஜயகாந்த் தற்போது உடல் ரீதியாக அவஸ்தை பட்டாலும் அவர் செய்த தர்மங்கள் அவரை தலைகாத்து கொண்டிருக்கிறது. இன்னும் பல கோடி ரசிகர்கள் மனதில் கேப்டன் விஜயகாந்த் மிகப்பெரிய இடத்தில் தான் வசித்து வருகிறார்.

Also read: வில்லனாக விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. வளர்ந்து வரும் மார்க்கெட்டை அழிக்க போட்ட திட்டம்

Trending News