வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்.. அரசை தெறிக்கவிட்ட விஜயகாந்த், வேற லெவல் தலைவா!

அடுத்த முதலமைச்சர் விஜயகாந்த் தானென பத்து வருடங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் அனைவரும் ஒப்புக் கொண்டிருப்பார்கள். அதற்கு காரணம் பல வருடங்களாக ஆட்சி செய்து வந்த திமுகவையே ஓட விட்டவர்.

2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை படு தோல்வியடையச் செய்து எதிர்க்கட்சியாக வளர்ந்தார். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்தின் ஆக்ரோஷமான பேச்சும், மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணமும் அனைவருக்கும் பிடித்துவிட்டது.

ஆனால் கடந்த சில வருடங்களாக விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அமைதியாக இருப்பதால் அவரது கட்சியும் அவரைப் போலவே தெம்பு இழந்து காணப்படுகிறது. இனியும் முன்னேறி வருமா என்பது சந்தேகம்தான்.

அதற்கு ஒரே வழி விஜயகாந்த் மீண்டு வர வேண்டும் என்பதுதான். இவ்வளவு நாட்களாக பெரும்பாலும் அமைதியாக இருந்த விஜயகாந்த் தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக பொய் சொல்வதாகவும், இதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நூறைத் தாண்டும் அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். இதற்கு உடனடியாக அரசு தீர்வு காண வேண்டும்.

ஒருவேளை பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் கண்டிப்பாக அன்றாட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து தமிழக மக்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டி வரும். இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருக்கிறது எனவும், இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

vijayakanth-stalin-cinemapettai
vijayakanth-stalin-cinemapettai

Trending News