தமிழ் சினிமாவில் நல்ல குணம் உள்ள மனிதர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் எம்ஜிஆர் தான். அந்த அளவிற்கு இவரது குணத்தை பற்றி தெரியாத ஆட்களே இருக்க முடியாது.
அதே போல் நடிகர் விஜயகாந்த் பொருத்தவரை சூட்டிங் ஸ்பாட்டில் யாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் முதலில் போய் அந்த பிரச்சனையை இவர்தான் சரி செய்து விடுவாராம். ஒருமுறை தமிழ் செல்வன் படத்தின் டைட்டிலுக்கு வாட்டாள் நாகராஜ் மிகப்பெரிய பிரச்சினையை கிளப்பி உள்ளார்.
அந்த பிரச்சனையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் முடித்து வைத்தது விஜயகாந்த் தானாம். விஜயகாந்த் பொருத்தவரை உண்மையில் வீரமான மனிதர், ஆனால் குணத்தில் குழந்தை போல் மனம் கொண்டவர்.
ஏனென்றால் எம்ஜிஆருக்கு பிறகு இரக்க குணமுள்ள சினிமா நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். ஒரு காலத்தில் விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் அழைத்து வந்தனர். அந்த அளவிற்கு பலருக்கும் இவர் தன்னால் முடிந்த உதவிகளை சினிமாத்துறையில் செய்துள்ளார்.
இவர் சொக்கத்தங்கம் எனும் படத்தில் நடித்து இருப்பார் ஆனால் உண்மையிலேயே இவர் ஒரு சொக்கத்தங்கம் என சினிமா துறையில் பலரும் கூறியுள்ளனர்.
அந்த காலத்தில் மதுரைக்காரனாக படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ராவுத்தர் இப்ராஹிம் என்பவர் தான் ஆரம்பகாலத்தில் விஜயகாந்துக்கு உறுதுணையாக இருந்துள்ளார். பின்பு சில கருத்து வேறுபாடு காரணமாக ராவுத்தர் இப்ராஹிம் தான் பிரிந்துள்ளார்.
அப்போது கூட விஜயகாந்த் அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என பெருந்தன்மையா அவரது முடிவிற்கு விட்டுக் கொடுத்தாராம்.