புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Vijayakanth : மறைந்த பின்பும் கேப்டனுக்கு கிடைத்த கௌரவம்.. உயரிய விருதை வாங்கிய பிரபலத்தின் வைரல் புகைப்படம்

கேப்டன் விஜயகாந்த் தான் மட்டுமல்லாமல் பிறரையும் வாழ வைத்து மகிழக்கூடியவர். சினிமாவில் அவருடைய பங்களிப்பு அளப்பறியாதது. கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு ரசிகர்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

இந்த சூழலில் நடிகர் சங்கத்திலும் கேப்டனாக சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு அரசியலில் இறங்கிய விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கினார். அதன்பிறகு உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கேப்டனுக்கு பத்மபூஷன் விருது

premalatha-vijayakanth
premalatha-vijayakanth

கடந்த டிசம்பர் மாதம் விஜயகாந்த் உயிர் இழந்தார். தேதிமுக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்போதும் அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்து செல்கின்றனர். சினிமா மற்றும் அரசியலில் பயணித்த விஜயகாந்திற்கு கடந்த மாதம் நடைபெற்ற பத்ம விருதுகள் விழாவில் விருது வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதை அடுத்து இரண்டாம் கட்ட நிகழ்வில் கேப்டனுக்கு விருது வழங்குவதாக அறிவித்தனர். அதன்படி மே ஒன்பதாம் தேதியான இன்று டெல்லியில் பத்மபூஷன் விருது கேப்டன் விஜயகாந்த்க்கு வழங்கப்பட்டுள்ளது. இதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் பெற்றார்.

பிரேமலதா விஜயகாந்த்

premalatha
premalatha

மேலும் பிரேமலதா விருது வாங்கிய புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. மறைந்த பின்பும் விஜயகாந்துக்கு கௌரவம் கிடைக்காத அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது.

மேலும் பிரேமலதா விருது வாங்கும் போது அவரது மூத்த மகன் விஜய பிரபாகரனும் அருகில் இருந்தார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் சார்பில் ராதிகா எதிர்த்து போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News