வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உடல் எடை பாதியாக குறைந்து பரிதாபமான தோற்றத்தில் விஜயகாந்த்.. ரசிகர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் தடுமாறி வருகிறார்.

ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் நடிகர் சங்க பொறுப்புகளை ஏற்று அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் முடிந்த உதவிகளை செய்ததாக பலரும் அவரை புகழ்ந்து கூறி உள்ளனர்.

மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என கருத்தில் கொண்டு தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சி அளவுக்கு வளர்ந்தார்.

ஆனால் சமீபகாலமாக விஜயகாந்துக்கு பேச்சு திறன் குறைந்ததால் அதிகளவு மேடைகளில் பங்கேற்பதில்லை. அதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜயகாந்த் உடல் நிலையில் பல பிரச்சனைகள் இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரானா வந்தது. அதற்காக தீவிர சிகிச்சையில் இருந்தார் விஜயகாந்த். சமீபத்தில் அதிலிருந்து மீண்டு வந்த விஜயகாந்த் தற்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.

அரசியல் சம்பந்தமாக டிடிவி தினகரன் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார். அப்போது பொம்மை போல் இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டு வெறும் கையை மட்டும் அசைத்து கொண்டிருக்கும் விஜயகாந்தை பார்த்து ரசிகர்கள் மனம் நொந்து போய் விட்டனர்.

vijayakanth-latest-photo
vijayakanth-latest-photo

Trending News