செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரேமலதாவிற்கும் முன் விஜயகாந்த் காதலித்த நடிகை.. குழிபறித்த நட்பு, கறாராக பேசி பிரித்துவிட்ட மனைவி

கேப்டன் என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்த் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டு தற்போது அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பிரேமலதாவிற்கு முன் கேப்டன் விஜயகாந்த் காதலித்த நடிகை பற்றியும், அந்த நடிகையுடன் விஜயகாந்தை சேரவிடாமல் பிரித்த பிரபலமே, அவர் வாயாலே அதை ஒத்துக் கொண்டிருக்கும் பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.

அதாவது கோலிவுட் முன்னணி இயக்குனராகவும் எழுத்தாளராகவும் 80, 90களில் வலம் வந்த இயக்குனர் லியாகத் அலிகான் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர். இவருக்கு விஜயகாந்த் மற்றும் நடிகை ராதிகாவும் காதலிப்பது தெரிந்த பிறகு அவர்களை பிரித்து விடுவதில் மும்முறமாக இருந்து அதை கச்சிதமாக செய்து முடித்து விட்டார்.

Also Read: வசூலை வாரிக்குவித்த கேப்டனின் 6 படங்கள்.. தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சேதுபதி IPS

அந்த சமயத்தில் விஜயகாந்த்-ராதிகா இருவரும் காதலிக்கின்றனர் என்பது ஊருக்கே தெரியும். ஏனென்றால் அவர்கள் இணைந்து நடித்த படங்களில் அவ்வளவு நெருக்கமாக நடித்திருப்பார்கள். இந்த ஜோடி இணைந்தால் நன்றாக இருக்கும் என அனைவரும் விரும்பினர்.

ஆனால் இவர்களது காதலை நெருங்கிய நண்பரான லியாகத் அலிகான் கூடவே இருந்து குழி பறித்து பிரித்து விட்டான். ‘தன்வினை தன்னை சுடும்’ என்பதற்கு ஏற்ப விஜயகாந்த் மற்றும் பிரேமலதா இருவருக்கும் திருமணமான பிறகு, லியாகத் அலிகான் மற்றும் விஜயகாந்தின் உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

Also Read: கேப்டனுக்கும், நவரச நாயகனுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா.? ரகசியத்தை போட்டுடைத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள்

இதற்கு முழு காரணம் பிரேமலதா தான் என்றும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஒரு காலத்தில் விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படங்களுக்கு எல்லாம் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் இருந்தார் லியாகத் அலிகான். விஜயகாந்திற்காக சூப்பர்ஸ்டாரின் படங்களை எல்லாம் தவிர்த்திருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளாத விஜயகாந்த் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, தான் புதிதாக உருவாக்கிய கட்சியில் இருந்து வெளியேற்றினார். பின்னர் லியாகத் அலிகா 2006 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். பிறகு 2011 ஆம் ஆண்டு அதிமுக மற்றும் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி இணைந்த போது பிரிந்த நண்பர்கள் இணையார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போதும் பிரேமலதா அவர்களை இணையவிடவில்லை.

Also Read: குடும்பமாக தீபாவளியை கொண்டாடிய 5 சினிமா பிரபலங்கள்.. கேப்டன் முதல் ஜெயம் ரவி வரை

ஆனால் இப்போது விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போதும் லியாகத் அலிகா அவரை நேரில் சென்று பார்க்க தயங்குகிறார். ஆனால் சீக்கிரம் அவரை சந்தித்து பார்க்க அனுமதி கேட்பதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்து கேப்டன் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளார். இருப்பினும் லியாகத் அலிகான், ராதிகா-விஜயகுமார் இருவரின் காதலை பிரித்து விடாமல் இருந்திருக்கலாம் என்பது கேப்டன் ரசிகர்களின் ஆதங்கம்.

Trending News