செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜயகாந்த் நடிப்பில் வெளிவராத ஒரே படம்.. பொருளாதாரத்தால் வீழ்ந்த சூழ்ச்சி

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் பல வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளன. ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லாம் ஓரம் தள்ளிய ஒரே நடிகர் விஜயகாந்த் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார்.

விஜயகாந்த் படங்கள் வெளியான காலங்களில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் படங்கள் கூட வெளியாவதற்கு படத்தின் தயாரிப்பாளர்கள் யோசிப்பார்கள். அந்த அளவிற்கு விஜயகாந்திற்கு ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் இருந்தது.

சினிமாவைப் பொருத்தவரை நடிகர்கள் கதையை கேட்டுவிட்டு படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொள்வார்கள். ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படங்களில் நடிக்க முடியாமல் போய்விடும் அந்த மாதிரி ஏராளமான நடிகர்களுக்கு திரைத்துறையில் நடந்துள்ளது.

விஜயகாந்த் மற்றும் ஆபாவாணன் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் 3வது முறையாக விஜயகாந்த் மற்றும் ஆபாவாணன் மூங்கில் கோட்டம் எனும் படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

vijayakanth-cinemapettai
vijayakanth-cinemapettai

மேலும் இப்படம் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதுமட்டுமில்லாமல் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பின்பு பொருளாதார பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. அதன் பிறகு இப்படத்தினை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை

விஜயகாந்த் நடிப்பில் வெளியாகாத படங்களின் பட்டியலில் இந்த படம் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் விஜயகாந்தின் நடிப்பில் ஒரு சில படங்கள் மட்டுமே தான் இன்றுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News