புதன்கிழமை, ஜனவரி 1, 2025

90 காலகட்டத்தில் உருவாகயிருந்த ராஜா ராணி? ராஜா விஜயகாந்த் ராணி யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ராஜா ராணி. தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஆர்யா மற்றும் நயன்தாரா இவர்கள் இருவருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.

இப்படம் வெளிவந்த போது ஆர்யாவிற்கும் மற்றும் நயன்தாராவிற்கும் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அறிமுக இயக்குனராக அட்லீ இயக்கியிருந்தார்.

இப்படம் வெளிவரும்போது ஏகப்பட்ட விமர்சனங்கள் வெளியானது. அதாவது மோகன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான மௌன ராகம் திரைப்படத்தை அப்படியே இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றது போல் கதையை மாற்றி அட்லி எடுத்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்தது.

vijayakanth vijaya shanthi
vijayakanth vijaya shanthi

அதற்கு அட்லியும் முழுமையாக ஒத்துக்கொள்ளாமல் அரசல்புரசலாக ஒத்துக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் அனைவரும் இது மௌனகுருவின் 2 பாகம் என்று தான் கூறிவந்தனர்.

ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் முன்பு ராஜா ராணி என்ற பெயரில் விஜயகாந்த் மற்றும் விஜயசாந்தி வைத்து எடுக்க திட்டமிட்டிருந்தனர். இப்படத்தை இப்ராஹிம் ராவுத்தர் புரோடக்சன் இன் எடுப்பதாக இருந்தது.

ராஜாவாக விஜயகாந்தும் ராணியாக விஜயசாந்தியின் நடிக்க இருந்தனர். இவர்கள் இருவரும் அன்றைய காலத்தில் ரஜினி, கமலை விட அதிக ரசிகர்களை வைத்திருந்தனர். இப்படம் மட்டும் உருவாகியிருந்தால் அன்றைய காலத்தில் ஒரு சக்கைபோடு போட்டு இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறியுள்ளனர்.

Trending News