தமிழ் சினிமாவின் ஆக்சன் ஹீரோ வரிசையில் நிரந்தர இடம் பிடித்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். அதுவும் போலீஸ் கதாபாத்திரம் என்றால் விஜயகாந்த் தான் என இன்றும் நினைக்கும் அளவுக்கு நடித்துள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் 2006ஆம் ஆண்டு உதயன் என்பவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பேரரசு. இந்த படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதில் ஒருவர் நல்லது செய்யும் CBI அதிகாரியாகவும், இன்னொருவர் நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்திலும் இருப்பது போன்று எடுக்கப்பட்டது.
இன்றும் தொலைக்காட்சிகளில் நல்ல வரவேற்ப்பை பெரும் பேரரசு திரைப்படம் அன்று தியேட்டர்களில் வரவேற்பை பெறவில்லை போல. ஆனால் அந்த படத்திற்கு பாலிவுட்டில் செம மவுசு உருவாகியதாக கூறுகின்றனர்.
அமீர்கான் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான தூம்3 படத்தில் பேரரசு படத்திலிருந்து சில காட்சிகள் அப்படியே மாற்றம் செய்யப்படாமல் இருந்ததை பார்த்து ஒரு நிமிடம் தமிழ் சினிமாவே அதிர்ச்சி அடைந்துவிட்டதாம்.
மேலும் பேரரசு படத்தில் இடம்பெற்றிருந்த காமெடி காட்சிகளில் ஒன்று ஒரு விஜயகாந்த் கொலை செய்வதை முத்துக்காளை என்ற காமெடி நடிகர் பார்ப்பது போலவும், அதை விசாரிக்க வரும் இன்னொரு விஜயகாந்தை அவர்தான் கொலைகாரன் எனவும் அவர் கூறுவது போன்று எடுக்கப்பட்டிருக்கும்.
அந்த காட்சியை அப்படியே அந்தாதூண் படத்தில் வைத்து விட்டார்களாம். அது தெரியாமல் தற்போது அந்தாதூண் படத்தை தமிழில் பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் பெரிய விலை கொடுத்து வாங்கி ரீமேக் செய்து வருகிறார். இப்படி கதைகளையும் காட்சிகளையும் திருடுவதற்கு பதிலாக பேசாமல் ரீமேக் என்று சொல்லி எடுத்துவிட்டு போகலாம் என்கிறது சினிமா வட்டாரம்.