தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு நடிகர்களும் ரசிகர்களும் கொண்டாடப்பட்ட நடிகராக வலம் வந்தவர் தான் புரட்சி கலைஞர் விஜயகாந்த். சினிமாவிலேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்பாரோ என்னமோ. மக்களுக்கு ஏதாவது ஒருவகையில் நல்லது செய்ய வேண்டும் என அரசியலில் தற்போது அவரது நிலைமையை சோகமாக உள்ளது. எந்த சூழ்நிலையிலும் இன்னமும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென துடித்துக் கொண்டிருப்பது தான் ரசிகர்கள் அவர்மீது மரியாதை வைக்க காரணமாக அமைந்து வருகிறது.
ரசிகர்களுக்கு பிடிப்பதைவிட சினிமாவில் உடன் நடிக்கும் நடிகர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நடிகரை பிரிப்பது அரிதான விஷயமாக இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் சினிமாவில் நடித்த காலகட்டத்திலும் சரி, நடிகர் சங்க தலைவராக இருந்த போதிலும் சரி. அனைத்து நடிகர்களும் விஜயகாந்தை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்தனர்.
அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் ஒருவரைப் பற்றி கூறினால் அது 100% அப்படியே நடக்கும் என்பது அந்த நடிகர்களின் நம்பிக்கையாக இருந்தது. அது தல அஜித் விஷயத்திலும் நடந்துள்ளது என்பதுதான் ஆச்சரியமான ஒன்று.
தல அஜித் முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக நடித்த திரைப்படம் ராசி. அஜித், ரம்பா, பிரகாஷ்ராஜ், நாகேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய ராசி திரைப்படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை இயக்கியவர் முரளி அப்பாஸ்.
இவர் சமீபத்திய பேட்டியில் ராசி படப்பிடிப்பின்போது தல அஜித் பற்றி விஜயகாந்த் ஒரு விஷயம் சொன்னதாகவும், பின்னாளில் அது அப்படியே நடந்தது குறிப்பிட்டுள்ளது தல ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தல அஜித் வளர்ந்து வந்த காலகட்டம் அது. அப்போது ராசி பட இயக்குனருடன் விஜயகாந்த், அஜித் சினிமாவில் நன்றாக வருவார் எனவும், ஆனால் அவருக்கு வில்லன் முகம் எனவும் குறிப்பிட்டாராம். அப்போது விஜயகாந்த் கருத்தில் நம்பிக்கை இல்லாமல் சென்ற இயக்குனர் அதன்பிறகு வாலி, மங்காத்தா போன்ற படங்களில் அஜித்தின் வில்லத்தனமான நடிப்பு கொண்டாடப்பட்டதை கண்டு விஜயகாந்தின் அன்றைய கருத்தில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லை என பிரமித்து போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.