திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்தை ஒருமையில் கண்டபடி திட்டிய விஜயகாந்த்.. எதற்கும் அசராதவனாக இருந்து வென்று காட்டிய ஏகே.!

Actor Vijayakanth Controversy: நடிகர் விஜயகாந்த் எப்போதுமே மேடையில் கொஞ்சம் காரசாரமாக பேசக்கூடிய நபர். அப்படிப்பட்டவர் நிறைய நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் பொது மேடையில் கோபப்பட்டு திட்டியதும் உண்டு இந்த வேலையை அஜித்திடமும் ஒருமுறை காட்டியிருக்கிறார்.

பொதுவாக அஜித் மனதில் பட்டதை யார் என்று பார்க்காமல் அப்படியே சொல்லக்கூடிய நபர். நடிகர்களை எந்த விழாவுக்கும் வரும்படி நிர்பந்திக்க கூடாது என தன் பேச்சை கலைஞர் வைத்துக் கொண்டே மேடையில் கூறினார் அஜித். இந்த தைரியம் மூத்த நடிகர்கள் பலருக்கும் வரவில்லை.

Also Read: சினிமா இண்டஸ்ட்ரிலாம் எங்களுக்கு தேவையே இல்லை.. விஜய், அஜித் செய்யும் கீழ்த்தரமான வேலைகள்

ஆனால் இளம் நடிகராக உச்சம் பெற்ற அஜித் அந்த சமயத்தில் கலைஞரிடம் மேடையில் தெரிவித்து தன்னுடைய தைரியத்தை காட்டினார். அதே மாதிரி நடிகர் சங்க கடனை அடைக்க விஜயகாந்த் ஏற்பாடு செய்த கலை நிகழ்ச்சிக்காக அஜித்தை அழைத்தார்,ஆனால் அஜித் வரவில்லை.

இதனால் நேரடியாகவே சென்று, ‘நீ வந்து ஆக வேண்டும், இல்லை என்றால் பிரச்சனை செய்வோம். உன் படம் எடுக்க விடமாட்டோம், ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்’ என விஜயகாந்த் மிரட்டி திட்டியுள்ளார். அதற்கு அஜித் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

Also Read: அவசரத்துக்கு உதவாமல் கட்சி நடத்தி என்ன பிரயோஜனம்.. கமல் செய்யாததை செய்துக்காட்டிய கேப்டன்

நான் விழாவுக்கு வரமாட்டேன் எனது சார்பாக நிதியை வழங்குகிறேன். நிதிக்காக தான் நீங்கள் விழா நடத்துகிறீர்கள் அப்புறம் என்ன என்று விஜயகாந்த்தை ஆஃப் செய்யும் அளவுக்கு பதிலடி கொடுத்தார். அஜித் தனக்கு சினிமா வாய்ப்பை விட தன்மானம் தான் முக்கியம் என நினைத்தார்.

அஜித்தின் இந்த பேச்சை கேட்ட விஜயகாந்த் பயங்கரமாக கோபப்படும் நபராக இருந்தவர், அவரை ஒன்னும் பண்ண முடியாமல் அஜித் கொடுத்த நிதியை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். அன்று முதல் இன்று வரை எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தன்னிலை மாறாமல் இருப்பவர் அஜித் என இன்று வரை நிருபித்து வருகிறார்.

Also Read: ஜெயிலர் நரசிம்மனை தட்டி தூக்கிய விடாமுயற்சி படக்குழு.. ரஜினியை ஃபாலோ பண்ணும் அஜித்

Trending News