வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஸ்டார் வேட்பாளர்கள்.. ராதிகாவை தண்ணி குடிக்க வைத்த கேப்டன் வாரிசு

Election Result: ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் தற்போது விறுவிறுப்பை கூட்டியுள்ளது. அதில் தமிழகத்தில் திமுக கூட்டணி போட்டியிட்ட 39 மற்றும் புதுச்சேரியில் 1 என 40/40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடி இருக்கிறது.

இதில் நட்சத்திர வேட்பாளர்களாக களம் இறங்கிய பிரபலங்களின் வெற்றி தோல்வி பற்றி இங்கு காண்போம். அதன்படி தமிழகத்தை பொறுத்தவரையில் ராதிகா, மன்சூர் அலிகான், தங்கர் பச்சான் ஆகியோர் போட்டியிட்டு இருந்தனர்.

அதில் விருதுநகர் தொகுதியில் ராதிகா, பாஜக சார்பில் போட்டியிட்டார். இதற்காக பல வித்தியாசமான பிரச்சாரங்களை மேற்கொண்ட சரத்குமார் தன் மனைவிக்காக அங்க பிரதக்ஷணம் கூட செய்தார்.

ஆனாலும் ராதிகா தற்போது தோல்வியை தழுவி இருக்கிறார். அதிலும் இந்த தொகுதியில் போட்டியிட்ட கேப்டனின் வாரிசு விஜய பிரபாகரன் பயங்கர டஃப் கொடுத்திருந்தார்.

படு தோல்வி அடைந்த ராதிகா

அதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கும் இவருக்கும் சில ஆயிரம் ஓட்டுகள் தான் வித்தியாசம் இருந்தது. ஆனால் ராதிகாவுக்கும் விஜய பிரபாகரனுக்கும் இடையில் இரண்டு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசம் இருந்தது.

அந்த வகையில் ராதிகாவை அவர் தண்ணீர் குடிக்க வைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அடுத்ததாக காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்ததாக பாமக சார்பில் நடிகர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. அதேபோல் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் மோசமான தோல்வியை பெற்றுள்ளனர்.

மேலும் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ்கோபி, மதூரா தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஹேமமாலினி ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பரபரப்பை கிளப்பும் தேர்தல் முடிவுகள்

Trending News