செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

கேப்டன் கைப்பிடித்து தூக்கிவிட்ட 7 பிரபலங்கள்.. நம்ம தளபதியே அந்த லிஸ்ட்ல இருக்காரே

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டனாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ஹிட் தான். இவர் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பலரை திரை துறையில் தூக்கி விட்டிருக்கிறார். அந்தவகையில் இவரால் திரைத்துறையில் சாதித்த ஐந்து பிரபலங்களை பார்க்கலாம்.

ஆர்கே செல்வமணி: மணிவண்ணனின் உதவியாளராக பணியாற்றியவர் ஆர்கே செல்வமணி. இவரின் முதல் படமே விஜயகாந்த் நடிப்பில் புலன் விசாரணை என்ற படத்தை 1990 இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயகாந்த்தின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்த அவரது 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை ஆர்கே செல்வமணி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு விஜயகாந்த் கேப்டன் என்று அழைக்கப்பட்டார்.

ஆபாவாணன்: அந்த காலகட்டத்தில்தான் விஜயகாந்த் உச்ச நடிகராக இருந்தார். ஆனால் மற்றவர்கள் போல் அல்லாமல் மாணவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் இயக்கிய திரைப்படங்களில் நடித்தார். இந்த வகையில் மாணவரான ஆபாவாணன் இயக்கிய முதல் படமான ஊமை விழிகள் படத்தில் விஜயகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட படமாக இருந்தது ஊமை விழிகள்.

மன்சூர் அலிகான்: மன்சூர் அலிகானை சிறந்த வில்லனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படம் கேப்டன் பிரபாகரன். இப்படத்தில் மன்சூர் அலி கான் நடிக்க விஜயகாந்த் தான் வாய்ப்பளித்தாராம். ஒரு பேட்டியில் மன்சூரலிகான் இதைப்பற்றி கூறும் பொழுது என்னைப் போன்ற பல கலைஞர்களை உருவாக்கியவர் விஜயகாந்த். சில நடிகர்கள் கதாநாயகிகள் மட்டுமே அறிமுகம் செய்வார்கள், ஆனால் விஜயகாந்த் பொறுத்தவரைத் தொழில்நுட்ப கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், சண்டைக்காட்சி கலைஞர்கள், இயக்குநர்கள் என பலதரப்பட்டவினரை அறிமுகப்படுத்தி உள்ளார் என்றார்.

தியாகராஜன்: ஆர் தியாகராஜன் இயக்கத்தில் 1984இல் வெளியான திரைப்படம் நல்ல நேரம். இப்படத்தில் விஜயகாந்த், நளினி, தியாகராஜன், தேங்காய் சீனிவாசன், செந்தில் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடித்ததன் மூலம் தியாகராஜன் அவர்களுக்கு நல்ல நேரம் படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல துறைகளிலும் கொடிகட்டி பறந்தார்.

வடிவேலு: வடிவேலுவின் ஆரம்ப கால வாழ்க்கையில் அவருக்கு ஆதரவாக இருந்தவர் விஜயகாந்த். வடிவேலு மதுரைக்காரர் என்பதால் அவருக்கு நிறைய உதவிகள் விஜயகாந்த் செய்துள்ளார். விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலு நடிக்க வைக்க விஜயகாந்த் தான் கேட்டுக்கொண்டாராம்.

தளபதி விஜய்: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்திற்கு தம்பியாக அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார்: கேப்டன் பிரபாகரன் படத்தின்போது சிகிச்சை பெற்று இருந்த சரத்குமாருக்காக காத்திருந்த விஜயகாந்த் அவர் வந்தபின் வில்லன் கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்கலாம் இந்த படத்தை முடிக்கலாம் என்று கட்டளையிட்டு இருந்தாராம். அந்த அளவிற்கு கூட இருப்பவர்களையும் தூக்கிவிட்டு சந்தோசம் காண்பார் விஜயகாந்த்.

- Advertisement -spot_img

Trending News