Vijayakanth – Vijay : விஜயகாந்தின் மறைவு ரசிகர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்திய நிலையில் அவரைப் பற்றிய நிறைய செய்திகள் இப்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தளபதி விஜய்யை அரசியலுக்கு விஜயகாந்த் கொண்டு வர நினைத்த சம்பவமும் ஒரு காலத்தில் நடந்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் கேப்டன் கோலோச்சி இருந்தாலும், அரசியலில் அவரால் நினைத்தபடி சாதிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் தான் நம்மால் முதலமைச்சராக முடியாது இதனால் விஜய்யை கட்சியில் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பாக அவருக்கு ஆதரவு கிடைக்கும். அவரை முதலமைச்சர் ஆக்கலாம் என்று விஜயகாந்த் திட்டம் தீட்டி வைத்திருந்தார்.
ஏனென்றால் விஜய் முதலமைச்சர் ஆக்கினால் தான் தனது தேமுதிக கட்சியை காப்பாற்றலாம் என்று அப்போது விஜயகாந்த் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை விஜய் இடம் சொல்வதற்கு உள்ளாகவே விஜயகாந்த் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டதால் அவரால் நேரடியாக விஜய் இடம் இதை சொல்ல முடியவில்லை.
Also Read : விஜயகாந்த்துக்கும், வடிவேலுக்கும் இதுதான் வித்தியாசம்.. தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த மாமன்னன்
ஆனால் இந்த விஷயம் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு தெரியுமாம். இதை அடுத்து விஜய்யை அழைத்து அவர் கூறிய போது தமது கட்சியில் சேர்ந்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதுவும் இது விஜயகாந்தின் ஆசை என்று கூறியதுடன், முதலமைச்சர் பதவி தேமுதிக தலைமையில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு நீங்களும் கட்சியில் இணைய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
விஜய் இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும்போது மற்றொருவர் கட்சியில் இணைவது அவருக்கு விருப்பம் இல்லையாம். அதுவும் முதலமைச்சர் பதவியும் கட்சி தலைமைக்கு என்று கூறியதால் தளபதி இதிலிருந்து பின்வாங்கி விட்டாராம். ஆனால் விஜய்யை தான் முதலமைச்சர் ஆக்க வேண்டும் என விஜயகாந்த் நினைத்த நிலையில் அதை பிரேமலதா சுக்குநூறாக உடைத்திருக்கிறார்.
Also Read : டாப் ஹீரோக்களுடன் விஜயகாந்த் இணைந்து கொடுத்த தரமான 5 ஹிட் படங்கள்.. சிவாஜியுடன் மிரட்டிய சண்டை காட்சி