சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜயகாந்த் ஜெயலலிதாவை பார்த்து நாக்க துருத்தல.. ரகசியத்தை உடைத்த ராதாரவி

Vijaykanth Not angry with Jayalalitha: சினிமாவை போலவே அரசியலிலும் அதகளம் செய்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். ஆனா சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை பார்த்து நாக்க துருத்தி பேசியதால்தான் அவருடைய அரசியல் வாழ்க்கை சரிவை நோக்கி சென்றது. உண்மையில் விஜயகாந்த் ஜெயலலிதாவை பார்த்து நாக்க துரத்தவே இல்லை என்று அவருடைய நெருங்கிய நண்பர் ராதாரவி சமீபத்திய பேட்டியில் ரகசியத்தை போட்டுடைத்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் முழுமூச்சாக அரசியல் களத்தில் இருந்த போது விஜயகாந்த் சொந்தமாக தேமுதிக என்ற கட்சியை துவங்கி, முதல் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8% வாக்குகளை பெற்றார். அதன்பின் 2011ம் ஆண்டு அதிமுக-தேமுதிக கூட்டணி அமைத்து, அமோக வெற்றியை பதிவு செய்தது. 150 இடங்களை கைப்பற்றிய அதிமுக ஆட்சி அமைக்க, 29 இடங்களில் வெற்றி பெற்ற தேமுதிக கட்சி தலைவர் கேப்டன் எதிர்க்கட்சித் தலைவரானார்.

கூட்டணி கட்சி என்ற போதிலும் ஆட்சி அமைத்த சில மாத காலத்திலேயே இரு கட்சிக்கும் மோதல் ஏற்பட்டது. சட்டப்பேரவையில் விலைவாசி உயர்வை குறித்து கேள்வி எழுப்பிய போது, கோபப்பட்ட விஜயகாந்த் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துருத்தினார். ஆனால் உண்மையாகவே அவர் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துருத்த வில்லையாம்.

Also Read: விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம் ரெடி.. மீண்டும் திரையில் கேப்டன்

விஜயகாந்த் ஜெயலலிதாவை பார்த்து கோபமாக பேசவில்லை

கூட இருந்த மத்திய அமைச்சர் ஒருவர் கேப்டனின் குடும்பத்தை தர குறைவாக பேசியதால் கோபத்தில் கேப்டன் அந்த அமைச்சரை பார்த்து தான் நாக்கை துருத்தினாராம். உண்மை அறியாத ஜெயலலிதாவும், ‘ இனிமே தேமுதிக கட்சிக்கு இறங்கு முகம் தான்’ என்று தெரிவிக்க, அதன் பின் அக்கட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சி அடைந்தது.

முன்பு மேடையில் கேப்டன் பேசியதை எல்லாம் ஹீரோயிசமாக காட்டியவர்கள், ஜெயலலிதாவை எதிர்த்த பிறகு, கேப்டனை ஒரு கோமாளி போல சித்தரித்தனர். ‘சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை பார்த்து நாக்க துருத்தவே இல்லை, அந்த அம்மா தான் என்ன வாழ வச்சவங்க. அவங்கள பாத்து அப்படி செய்வேனா!’ என்று கேப்டன் மிகுந்த வருத்தத்துடன் அவருடைய நெருங்கிய நண்பரும் நடிகருமான ராதாரவியிடம் மனம் திறந்து குமுறி இருக்கிறார். இந்த உண்மைகளை ராதாரவி சமீபத்திய பேட்டியில் போட்டுடைத்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: விஜயகாந்த் நம்பி வளர்த்தவைகள் & வளர்த்தவர்கள்.. இதனால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இருந்த கேப்டன்..!

Trending News