ஒரு சில நடிகர்கள் 100 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவற்றில் ஒரு சில படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் காலம் கடந்தும் பாராட்டப்படும். அப்படி விஜயகாந்துக்கு அமைந்த திரைப்படம்தான் ஊமை விழிகள்.
முதலில் ஊமை விழிகள் படத்தில் விஜயகாந்துக்கு வாய்ப்பு தரவில்லை. அதன்பிறகு நட்பு ரீதியாக கேட்டதால் அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு அந்த படம் பெற்ற வெற்றியும், விஜயகாந்த் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பும் சொல்லிமாளாது.
சினிமாவைப் பொருத்தவரை ஒருவரை நினைத்து கதை எழுதும் இயக்குனர்களுக்கு துரதிர்ஷ்டவசமாக அந்த நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காமல் போக மற்றொரு நடிகருக்கு அதிர்ஷ்டம் அடித்து விடும்.
அந்த வகையில் விஜயகாந்துக்கு கிடைத்த டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரம். அப்படி ஒரு கம்பீரம், அதே நேரத்தில் கண் கலங்க வைக்கும் சென்டிமென்ட் என ஒரு கதாபாத்திரத்தில் அவ்வளவு பரிமாணங்களையும் அவருக்கு கொடுத்தது.
அப்படிப்பட்ட டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் சிவகுமார் தானாம். இன்று நினைத்துப் பார்த்தாலும் விஜயகாந்த் ரேஞ்சுக்கு சிவகுமார் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பாரா என்றால் கொஞ்சம் சந்தேகம்தான்.
ஊமைவிழிகள் படத்தை அரவிந்துராஜ் என்பவர் இயக்கியிருந்தார். மேலும் ஆபாவாணன் தயாரித்து இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.