வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இருந்த இடம் தெரியாமல் போன விஜயகாந்த்.. மொத்த கண்ட்ரோலையும் கையிலெடுத்து வீழ்த்தப்பட்ட கேப்டன்

ரசிகர்களால் கேப்டன் என்று கொண்டாடப்படும் விஜயகாந்த் இப்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவருக்கான இடம் அப்படியே தான் இருக்கிறது. அந்த அளவிற்கு அவர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அப்படிப்பட்ட கேப்டன் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போனதற்கு பின்னால் பல அதிர்ச்சியூட்டும் காரணங்கள் இருக்கிறது.

அதாவது விஜயகாந்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவர் உயர்ந்த நிலைக்கு வரும் காலம் வரை கூடவே உறுதுணையாக இருந்த ஒரே நபர் என்றால் அது தயாரிப்பாளர் ராவுத்தர் தான். இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்த் இன்று ஒரு அங்கீகாரத்துடன் இருப்பதற்கு காரணமும் அவர் தான். இப்படி நட்பிற்கு இலக்கணமாக இருந்த இந்த நண்பர்கள் பிரிந்தது காலத்தின் கட்டாயம் என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: பார்த்த உடனேயே சிரிப்பை மூட்டும் 6 நடிகர்கள்.. சின்ன கவுண்டர் விஜயகாந்த் ஆகவே வாழும் நமோ நாராயணா  

ஆனால் இதற்கு முக்கிய காரணம் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தான் என்ற ஒரு குற்றச்சாட்டு இப்போது வரை இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய வீழ்ச்சிக்கு காரணமும் இவர் தான் என்றும் பேசப்பட்டு வருகிறது. உண்மையில் நண்பருக்காக மட்டுமே வாழ்ந்த ராவுத்தர் விஜயகாந்தின் திருமணத்திற்கு பிறகு தான் அவரை விட்டு பிரிந்தார்.

அதற்கு முன்பு வரை ராவுத்தர் தான் விஜயகாந்தின் கால்ஷூட், சம்பளம் போன்ற அனைத்தையும் பார்த்து வந்தார். ஆனால் என்று அவருக்கு திருமணம் நடந்தோ அதன் பிறகு அத்தனை அதிகாரமும் பிரேமலதாவின் கைக்கு சென்றிருக்கிறது. அதை தொடர்ந்து ராவுத்தருக்கான சொத்துக்களும் சரி பாதியாக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: நட்புக்காக பிடிக்காத இயக்குனரின் படத்தில் நடித்த விஜயகாந்த்.. ஹிட் கொடுத்து வாய் அடைக்க வைத்த சம்பவம்

அதன் பிறகு தான் இந்த இரண்டு நண்பர்களும் இரு வேறு துருவங்களாக மாறிப் போனார்கள். ஒரு கட்டத்தில் ராவுத்தரின் மறைவு, அரசியலில் சரிவு என்று விஜயகாந்த் பல பிரச்சனைகளை சந்தித்தார். அது மட்டுமல்லாமல் நண்பரை பிரிந்த ஒரு குற்ற உணர்ச்சியும் அவருக்கு இருந்திருக்கிறது. இவை அனைத்தும் தான் அவரை மனதளவில் சோர்வடையவும் வைத்திருக்கிறது.

இன்று அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் இந்த மன உளைச்சல்களும் ஒரு காரணமாக இருக்கிறது என அவருக்கு நெருக்கமானவர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரின் மனைவி மொத்த கண்ட்ரோலையும் கையில் எடுத்ததால் தான் கேப்டன் வீழ்ந்தார் என்ற ஒரு குற்றச்சாட்டு இப்போதும் இருக்கிறது.

Also read: காமெடி நடிகருக்காக 15 பேரை அடித்து விரட்டிய விஜயகாந்த்.. சவுக்கு தோப்பில் கேப்டன் செய்த அட்டூழியம்

Trending News