திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சேதுபதி பட வில்லன் திடீர் மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்

Movie Sethupathi IPS: விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் சேதுபதி ஐபிஎஸ். பி வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் மீனா, விஜயகுமார், ஸ்ரீவித்யா, காசன் கான் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் அதிக நாள் ஓடி விஜயகாந்துக்கு பாராட்டையும் பெற்று தந்தது.

இந்த சூழலில் போலீஸ் அதிகாரியாக சேதுபதி கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இதில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தவர் கசான் கான். சேதுபதி ஐபிஎஸ் படத்தில் சிவப்பிரகாசம் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இது தவிர பல படங்களில் கொடூர வில்லனாக பயமுறுத்தி இருப்பார்.

Also Read : ஏக்கத்துடன் இருந்த வடிவேலுவை தூக்கி விட்ட விஜயகாந்த்.. நன்றியை மறந்து அசிங்கப்படுத்திய கொடுமை

அதுவும் விஜய்யின் பத்ரி, பிரியமானவளே போன்ற படங்களிலும் கசான் கான் வில்லனாக நடித்திருந்தார். மேலும் வானத்தைப்போல, மேட்டுக்குடி, ஆணழகன், உள்ளத்தை அள்ளித்தா, வல்லரசு, சீனா தானா 001 போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு லைலா ஓ லைலா என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்த இவர் எங்கு போனார் என்ன ஆனார் என்பதே தெரியாமல் இருந்தது. அதாவது சினிமாவை விட்டு ஒதுங்கி இவர் தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி வந்தாராம்.

Also Read : ஐட்டம் டான்சருக்கு முழு கதையும் சொன்ன தயாரிப்பாளர்.. கோபப்பட்ட விஜயகாந்திற்கு அடித்த லக்

அந்தச் சமயத்தில் கசான் கானை தேடி பட வாய்ப்புகள் வந்தாலும் இப்போது சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்று மறுத்து வந்தாராம். இப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கிசான் கான் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் உள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கசான் கான் இறந்த செய்தியை பிரபல மலையாள தயாரிப்பாளர் பாதுஷா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார். மலையாள நடிகர் திலீப் போன்ற பிரபல நடிகர்கள் கசான் கானுக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் கசான் கான் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

Also Read : மாஸ்டர் மாமாவை கண்டுகொள்ளாத விஜய்.. பதிலுக்கு தளபதிக்கு வந்த தலைவலி

Trending News