Vijayakanth: ஒரு பொண்ணு நினைச்சா ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். புராண காலத்திலிருந்து இதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது விஜயகாந்தின் வாழ்க்கையிலும் சரியாகத்தான் இருக்கிறது. புகழ் போதையில் திளைத்துக் கொண்டிருக்கும் பிரேமலதா இப்படித்தான் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
தற்போது நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலேயே அதை வெளிப்படையாக தெரிந்தது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சில நாட்கள் கூட ஆகாத நிலையில் கேப்டனை அவர்கள் பொதுவெளிக்கு அழைத்து வந்தது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
அவருடைய உடல் நிலையை கூட ஒரு மனைவியாக அவர் பொருட்படுத்தவில்லை. அந்த அளவுக்கு பதவி ஆசை ஆட்டி படைக்கிறது. தனி மனித நலனில் அக்கறை இல்லாதவர்கள் எப்படி நாட்டு நலனை கருத்தில் கொள்வார்கள். அதிலும் நேற்று பொதுக்கூட்ட மேடையில் கேப்டனை பார்த்த பலருக்கும் வேதனையாக இருந்தது.
Also read: மருத்துவமனையில் இருந்து வெளிவந்த அறிக்கை.. விஜயகாந்த் எப்படி இருக்கிறார் தெரியுமா?
அவரால் சரியாக உட்காரக்கூட முடியவில்லை. அப்படிப்பட்டவரை கஷ்டப்படுத்தி பதவியை கையில் எடுத்திருக்கும் பிரேமலதாவுக்கு எல்லா பக்கத்தில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து கொண்டிருக்கிறது. உண்மையில் விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு அவர்தான் காரணம் என சில வருடங்களாக வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது.
அது நேற்றைய மேடையில் வெளிப்படையாகவே தெரிந்தது. எதற்காக இந்த அவசர கூட்டம் என்ற கேள்வியும் இப்போது எழுகிறது. மேலும் வாழ்க்கையில் மனைவியை தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் வேண்டும். இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதற்கு விஜயகாந்தின் வாழ்க்கையே உதாரணமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் கேப்டன் சறுக்கிவிட்டார்.
இதன் காரணமாகவே தூய்மையான நட்பு, அரசியல் என அனைத்தையும் அவர் இழந்துவிட்டார். உண்மையில் அவருடைய உடல்நிலை இவ்வளவு மோசமடைய காரணம் கேப்டனின் மனைவியும் அவரை சுற்றி இருக்கும் உறவுகள் தான். இதை பல சினிமா விமர்சகர்கள் வெளிப்படையாகவே பேட்டிகளில் கூறி வருகின்றனர். தற்போது நடக்கும் விஷயங்களை எல்லாம் பார்க்கும் போது அது எந்த அளவுக்கு உண்மை என தெரிகிறது.
Also read: காலம் கொடுமையானது, விஜயகாந்த்தை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்.. தேமுதிகவின் அடுத்த பொதுச் செயலாளர்