டிசம்பர் 28ஆம் தேதி 2003ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், இன்றும் திரை துறையில் அவர் ஆற்றிய பணிகளும் செய்த நற்செயல்களும் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பெற்று வருகிறது. அதன் காரணமாகவே மீண்டும் அவரை வெள்ளித்திரையில் நவீன தொழில்நுட்பம் மூலம் காண்பிக்கிறார்கள்.
இப்படி சமீபத்தில் வெளிவந்த கோட் படத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற ஏ ஐ டெக்னாலஜி மூலம் வெள்ளித்திரையில் விஜயகாந்த்தை காண்பித்தார்கள். சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் அந்த படத்தில் கேப்டனை 10 நிமிடங்கள் வரை காண்பித்தார்கள்.
இப்படி விஜயகாந்தை மீண்டும் ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வருவதற்கு அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் அனுமதி வாங்கிய பின் செயல்படுத்தினார்கள். அவரிடம் இருந்து பழைய விஜயகாந்த் படங்களின் புட்டேஜ்களை வாங்கி இந்த தொழில் நுட்பத்தில் பயன்படுத்தினார்கள்.
இதே தொழில்நுட்பத்தில் கேப்டனின் நண்பர் ஆபாவாணன் மீண்டும் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு இருந்தார். விஜயகாந்த் இறப்புக்கு பின்னர் இதைப்பற்றிய அவர் சேனல்களில் பேட்டி கொடுத்து இருந்தார். ஆனால் அது இப்பொழுது கைகூடி வரவில்லை.
விஜயகாந்த் நடித்து 1986ஆம் ஆண்டு ஆபாவாணன் கதை எழுதி தயாரிக்கப்பட்ட படம் ஊமை விழிகள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் ஆபாவாணன் திட்டமிட்டு இருந்தார். அதற்காக ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என எண்ணிக்கொண்டிருந்த அவருக்கு விஜயகாந்த் குடும்பம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவு டிராப்பானது.