திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜயகுமார் நடிப்பில் சூப்பர் ஹிட்டான 5 படங்கள்.. பார்த்தா மெர்சல் ஆயிடுவீங்க!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் விஜயகுமார். ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே இன்றளவும் ரசிகர்கள் பார்க்கப்பட்டு பெரிதும் பாராட்டப்பட்டு தான் வருகிறது.

செந்தூரப்பாண்டி: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் செந்தூரப்பாண்டி. இப்படத்தில் விஜய் மற்றும் விஜயகாந்திற்கு அப்பாவாக விஜயகுமார் நடித்திருந்தார்.

விஜய்யின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் எப்படி ஒரு காரணமோ அதே போல தான் விஜயகுமாரும் ஏனென்றால் இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்த இவரது நடிப்பு பெரிதும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

நாட்டாமை: சரத்குமார் மற்றும் மீனா, குஷ்பூ போன்ற பல நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். எத்தனை நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தாலும் நாட்டாமை படத்தைப் பற்றி பேசும்போது அனைவருக்கும் ஞாபகம் வருவது விஜயகுமார் தான்.

இப்படத்தில் இவரது தனித்துவமான நடிப்பு ரசிகர்கள் பெரும் வரவேற்பு பெற்று இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. குறிப்பாக இப்படத்தில் அவர் பேசும் நீதிடா நேர்மைடா நியாயம்டா என பேசும் வசனம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

பாட்ஷா: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து திரைப்படம் பாட்ஷா இப்படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்து அனைத்து ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.

குறிப்பாக தனது மகனான ரஜினிகாந்தை காப்பாற்றுவதற்கு ரகுவரனிடம் இவர் பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தின் வெற்றி விஜயகுமார் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வன்: ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தில் அர்ஜுனனின் நடிப்பு எந்த அளவிற்கு பேசப்பட்டது. அதே அளவிற்கு விஜயகுமாரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

குறிப்பாக மனிஷா கொய்ராலாவிற்கு அப்பாவாக நடித்த இவர் காட்சிகள் அனைத்துமே ரசிக்கக் கூடிய வகையில் அமைந்தது .

குஷி: எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்து இருப்பார். ஜோதிகாவிற்கு அப்பாவாக விஜயகுமார் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக விஜய் இடம் தம்பி அது என்ன எக்கோ வா என கேள்வி கேட்பார்.

அதற்கு விஜய் இல்ல ஈகோ அப்படி என ஜோதிகாவை குத்திக் காட்டுவார். இந்த காட்சியில் விஜயகுமார் நடிப்பு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது. குஷி படம் வெற்றி அடைவதற்கு விஜய் மற்றும் ஜோதிகா, விவேக் உட்பட விஜயகுமாரும் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

மேற்கண்ட படங்களைத் தவிர விஜயகுமார் ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக யூத், குஷி, சந்திரமுகி, சாமி, பூவெல்லாம் கேட்டுப்பார் சொல்லிக்கொண்டே போகலாம்.

Trending News