திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சர்வைவர் வெற்றிக்கு பின் விஜயலட்சுமியின் உருக்கமான பதிவு.. அயன் லேடினா நீங்க தான்

ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். 91 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது விஜயலட்சுமி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விஜயலட்சுமி நான் யாருடைய விளையாட்டையும் பார்க்க வரவில்லை என்னுடைய விளையாட்டை விளையாடுவேன் என்று கூறினார்.

தற்போது அதை நிரூபிக்கும் வகையில் வெற்றியாளராக மகுடம் சூட்டப்பட்டுள்ளார். இவருக்கு இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்காக ஒரு கோடி ரூபாய் பரிசு கொடுக்கப்பட்டது. அந்த காசோலையை நடிகர் அர்ஜுன், விஜயலட்சுமிக்கு வழங்கினார்.

சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பின்னர் நடிகை விஜயலட்சுமி தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய போட்டோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அதில் விஜயலட்சுமி தன் பாதங்களை கேமராவிற்கு காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அதில் அவருடைய பாதங்கள் இரண்டும் மிகவும் ரணமாக காட்சி அளிக்கிறது. இதிலிருந்தே அவர் அந்த நிகழ்ச்சியில் எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளார் என்பது தெரிகிறது.

இது சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அவரின் முதல் பதிவு என்பதால் அவருடைய ரசிகர்கள் அவருக்கு சோஷியல் மீடியாவில் பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும் அவர் அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

vijayalakshmi-survivor
vijayalakshmi-survivor

உண்மையில் அத்தனை கடுமையான போட்டியாளர்களையும் ஓரம் கட்டி வெற்றி பெற்ற விஜயலட்சுமி ஒரு இரும்பு பெண்மணியாகவே தெரிகிறார்.

vijayalakshmi
vijayalakshmi

Trending News