திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிக்பாஸில் விட்டதை சர்வைவரில் பிடித்த விஜயலட்சுமி.. பரிசுத்தொகை கேட்டா தலை சுத்துது

ஜீ தமிழில் டிஆர்பி ரேட்டிங் அதிகரிப்பதற்காக சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டது. இந்த இரு அணிகளுக்கும் கடுமையான போட்டி நடத்தப்பட்டது. பின்பு ரைபிள் பஞ்சாயத்தில் போட்டியாளர்கள் எலிமினேட் செய்ய விரும்பும் நபருக்கு ஓட்டு போடுவார்கள்.

அதிக வாக்குகள் பெற்ற நபர் மூன்றாம் உலகத்திற்கு செல்வார். மூன்றாம் உலகத்தில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் மீண்டும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். அவ்வாறு எலிமினேட் செய்யப்பட்டு மூன்றாம் உலகத்திலிருந்து மீண்டும் வந்தவர் விஜயலட்சுமி. இவருடன் பைனலில் வனேசா மற்றும் சரண் இறுதிச்சுற்று போட்டிகளில் வரை தேர்வு பெற்றார்கள்.

மற்ற போட்டியாளர்களை எல்லாம் ஜூரியாகத்தான் வந்தார்கள். டைட்டில் வின்னர் யார் என்பதற்காக வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டது. அதில் விஜயலட்சுமி அதிக வாக்கு பெற்று சர்வைவர் நிகழ்ச்சி சீசன் 1 இல் டைட்டில் வின்னர் ஆனார். இதனால் விஜயலட்சுமிக்கு “ஒரு கோடி” ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

தற்போது அதற்கான புகைப்படங்களும், வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த சர்வைவர் ரசிகர்கள் விஜயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜயலட்சுமி சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அஞ்சாதே படத்தில் நரேன் ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் விஜயலட்சுமி வையல் காடு என்ட்ரி ஆக பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டார். பிக்பாஸில் இவருக்குப் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார். இதனால் இவருக்கு இனிமேல் பட வாய்ப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News