வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரோகிணியின் முகத்திரையை கிழிக்க போகும் மருமகள்.. புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து படும் அவமானம்

Sirakadikka Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எத்தனையோ சீரியல்களில் தற்போது டிஆர்பி படி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பது சிறகடிக்கும் ஆசை. இதில் முத்துவின் யதார்த்தமான நடிப்பு பார்ப்பவர்களின் மனதை கவர்ந்து விட்டார். அத்துடன் இவர் படிச்சு நல்ல வேலையில் இல்லை என்பதால் வீட்டில் யாரும் சரியாக மரியாதை கொடுப்பதில்லை. முக்கியமாக அம்மா மற்றும் கூடப் பிறந்தவர்கள் அனைவரும் முத்துவை மட்டம் தட்டி வருகிறார்கள்.

இருந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் முத்து, தன்னை நம்பி வந்த மீனா சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மொத்த அன்பையும் கொட்டி பார்த்துக் கொள்கிறார். தற்பொழுது மனோஜ் வேலையில்லாமல் சும்மா வெட்டியாக பார்க்கில் போய் நேரத்தை செலவழித்து விட்டு வருகிறார் என்ற விஷயம் முத்து மூலமாக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தெரிந்து விடுகிறது.

இதனால் குடும்பத்தில் அனைவரது முன்னாடியும் மனோஜ் அவமானப்பட்டு நிற்கும் நிலைமைக்கு ஆளாகி விட்டார். இவருடன் சேர்ந்து ரோகினியும் அவமானத்தில் கூனிக்குறுகி போய்விட்டார். இவரை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் மனோஜ் ரொம்பவே கெஞ்சி மன்னிப்பு கேட்டார்.

Also read: பாக்யாவை மட்டம் தட்டின கோபியின் நிலைமை பரிதாபம்.. ஒரு முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்

ஆனால் ரோகினியை பொருத்தவரை மனோஜ்க்கு வேலை போனது கூட பெரிய விஷயமாக தெரியவில்லை, முத்து முன்னாடி அவமானப்பட்டு விட்டோமே என்பதுதான் பெரிய குற்றமாக நினைக்கிறார். அதனால் ரோஹினி அவருடைய பிரிண்ட் வீட்டுக்கு போயிட்டு நடந்த விஷயத்தை சொல்லி புலம்புகிறார். அதன் பின் வீட்டில் நடந்த விஷயத்தை யோசித்து யோசித்து அங்கேயும் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு போய்விட்டார்.

பிறகு ரோகிணியின் பிரெண்ட்ஸ் மனோஜ்க்கு போன் பண்ணி ரோகினி காணாமல் போன விஷயத்தை பற்றி சொல்கிறார். உடனே மனோஜ் எல்லா பிரச்சனைக்கும் முத்துதான் காரணம் என்று அவர் மீது பழியை போடுகிறார். கடைசியில் முத்து, மீனா மற்றும் மனோஜ் அனைவரும் சேர்ந்து ரோகிணியை தேடி அலைகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ரோகிணி பார்லர் வைக்கலை சும்மா வேலை தான் பார்க்கிறார்.

அத்துடன் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என்ற விஷயம் மட்டும் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்தால் இவருடைய கெதியும் அதோ கெதி தான். கூடிய விரைவில் ரோகினி பற்றிய உண்மையை மீனா கண்டுபிடித்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்ல போகிறார். கடைசியில் புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து அவமானத்தில் நிற்க போகிறார்கள்.

Also read: தம்பிக்கு பாசத்தைக் காட்டி தூபம் போடும் குணசேகரன்.. சக்தியை போல் ரெமோவாக மாறிவரும் கதிர்

Trending News