வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கமலை மறைமுகமாக சுழித்து விடும் விஜய் சேதுபதி.. தப்புன்னு மொத்தத்தையும் மறைக்கும் டி எஸ் பி

பிக் பாஸ் நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்குவது போல் பழைய மாதிரி சுவாரசியம் இல்லை என்பதுதான் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஹாட் டாப்பிக். கமல் ஒன்றிலிருந்து ஒன்றை தோண்டி எடுத்து புதுப்புது கதைகளாக சொல்லுவார் ஆனால் அதை செய்ய தவறுகிறார் விஜய் சேதுபதி.

கமல் தொகுத்து வழங்கிய பொழுது ரசிகர்களுக்கு தெரியாத பல புது விஷயங்களை சொல்லி ஆச்சரியப்படுத்துவார். சுவாரசியத்துக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ச்சி ஜெட் வேகத்தில் போகும். ஆனால் விஜய் சேதுபதி சில இடங்களில் கோட்டை விடுகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ஸ்பான்ஸர்கள் இருந்து வருகிறார்கள். நிகழ்ச்சியின் போது கமல் ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக சொல்லி கௌரவ படுத்துவார். இப்படி ஸ்பான்சர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து ஆட்டத்தை தொடங்குவார்.

தப்புன்னு மொத்தத்தையும் மறைக்கும் டி எஸ் பி

விஜய் சேதுபதி சில விஷயங்கள் நான் செய்ய மாட்டேன் என கமலை மறைமுகமாக சுழித்து வருகிறார். முக்கியமான பெரிய ஸ்பான்சரை மட்டுமே விஜய் சேதுபதி கூறுகிறார். மற்றவர்களை அறிமுகப்படுத்த மறுக்கிறார். பெருந்தொகை கொடுத்தவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் வார்த்தைகளால் அறியப்படுகிறார்.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது இந்த நிகழ்ச்சியின் முக்கியமான ஸ்பான்சராக ஆன்லைன் ரம்மி நிறுவனமும் இருக்கிறது. அதனால் அது தவறு என்பதை மறைமுகமாக விஜய் சேதுபதி சொல்ல மறுக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் கமல் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் எல்லாத்தையும் சொல்லி விடுவார்.

Trending News