சினிமாவில் 80 காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் விஜயசாந்தி. அப்போதெல்லாம் விஜயசாந்திக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகர்கள் இணையாக பல கோடி ரசிகர்களை வைத்துள்ளார் விஜயசாந்தி.
தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சினிமாவில் கொடிகட்டிப் பறந்துள்ளார் அப்போதெல்லாம் மற்ற நடிகைகள் இவரை நெருங்க கூட முடியாது. அந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தார் விஜயசாந்தி.
தமிழில் மன்னன் படத்தில் ரஜினிகாந்திற்கு இணையாக கெத்தாக நடித்திருப்பார் விஜயசாந்தி. இப்படம் வெற்றி அடைந்ததற்கு விஜயசாந்தியின் நடிப்பு ஒரு முக்கிய காரணம் என அப்போது காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. அந்த அளவிற்கு நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருந்தார்.

ஒரு முறை பத்திரிக்கையாளர் ஒருவர் விஜயசாந்தியை பார்த்து உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் ஏன் இன்று வரை குழந்தை பெற்று எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு விஜயசாந்தி மக்களுக்கு சேவை ஆற்றுவது என்னுடைய முதல் நோக்கம். அதனாலேயே நான் குழந்தையை பெற்று எடுக்க வில்லை என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இதற்கு அவரது கணவரும் சம்மதிப்பதாக கூறினார்.
இவருக்கு ஜெயலலிதாதான் இன்ஸ்பிரேஷன், ஜெயலலிதா போலயே மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்பது என்னுடைய முதல் நோக்கம் எனவும் கூறியுள்ளார். தற்போது வரை அரசியலில் தனது சேவையை பங்காற்றி வருகிறார் விஜய் சாந்தி.