வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜயகாந்தை மறவாத ரஜினி, கமல்.. நண்பனுக்காக வெளியிட்ட பேட்டி

சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது முத்திரையைப் பதித்த கேப்டன் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவற்றிலிருந்து ஒதுங்கி அவ்வப்போது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனால் அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக செல்லும் விஜயகாந்த், இந்த முறை நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவரைக் குறித்த தவறான வதந்திகள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பரவுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்ததால் கால் வீக்கம் ஏற்பட்டு சென்னையில் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வலது கால் விரல்களை அகற்ற பரிந்துரைத்தனர்.

இதையடுத்து பல ஆண்டுகளாக சர்க்கரைநோய் பிரச்சினையினால் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லாததால் கால் வீக்கம் ஏற்பட்டதை தற்போது கண்டுபிடித்த மருத்துவர்கள் அவருடைய வலது காலில் உள்ள மூன்று விரல்களை அகற்றி உள்ளனர் இந்த சிகிச்சைக்குப் பிறகு மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்ற தகவல் வெளியானது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் விஜயகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என உலகநாயகன் கமலஹாசன் ட்விட் செய்திருக்கிறார். இதில், ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என்னுடைய இனிய நண்பன் விஜயகாந்த் பூரண குணமடைந்து முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்’ என கமல் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

இதைப் போன்றுதான் சிம்புவின் தந்தை டிஆர் ராஜேந்தர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும்போது அவரை நேரில் சந்தித்த கமல் அவருடைய உடல் நலத்தை குறித்து விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தார். தற்போது கமல், விக்ரம் படத்தின் கொண்டாட்டத்திற்கு இடையிலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் திரை பிரபலங்களையும் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அவர்களுடைய நலம் குறித்து அக்கறைவுடன் விசாரிக்கிறார்.

கமலஹாசனை போன்றே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் விஜயகாந்தும் நேரில் சந்தித்து அவருடைய உடல் நலத்தை விசாரித்ததுடன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ‘நல்ல மனிதன். நல்ல நண்பனான விஜயகாந்த் நீண்ட நாட்கள் நல்லா இருக்கணும். அவர் இப்போது சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் இருக்கிறார். இந்த சந்திப்பில் துளிக்கூட அரசியல் கிடையாது’ என பேட்டியளித்துள்ளார்.

Trending News