வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூர்யாவுக்காக கெஸ்ட் ரோலில் நடித்த விஜயகாந்த்.. அவர தங்கம்னு சொல்றதுல தப்பே இல்லை

சமீபகாலமாக விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் மற்ற நடிகர்களின் திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றனர். இல்லையென்றால் நடிகர்கள் அவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் ஒரு காட்சியில் தலைகாட்டி செல்கின்றனர்.

ஆனால் பெரிய நடிகர்கள் யாரும் இது போன்று கெஸ்ட் ரோலில் நடிப்பது கிடையாது. அப்படி ஒரு விஷயத்தில் சற்று விதிவிலக்கான அவர்தான் நடிகர் விஜயகாந்த். வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உதவி செய்யக்கூடிய இவர் சில திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான மாயாவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த் ஒரு காட்சியில் நடித்து இருப்பார். அதற்காக ஒரு முறை சூர்யா அவரிடம் சென்று தன்னுடைய படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு விஜயகாந்த் கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்படி என்றால் நாளை பிலிம் ஸ்டுடியோ வந்துவிடு கண்டிப்பாக செய்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் விஜயகாந்த் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதனால் சூர்யா அவர் கூறிய நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே அங்கு சென்றுள்ளார்.

அப்போது விஜயகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாகி கொண்டிருந்தது. படப்பிடிப்பு முடிந்து இடைவெளியில் சூர்யா, விஜயகாந்திடம் சென்று இப்போது அந்த காட்சியை ஷூட் செய்து கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார்.

உடனே விஜயகாந்த் தன்னுடைய படத்தில் பணியாற்றிய டெக்னீசியன்கள் அனைவரையும் அழைத்து, போய் சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு மாயாவி திரைப்படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஓய்வு நேரம் என்று கூட பாராமல் சூர்யாவுக்காக அவர் இந்த விஷயத்தை செய்திருக்கிறார். ஏற்கனவே விஜயகாந்த், சூர்யா நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பெரியண்ணா திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News