புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கேப்டன் 16 அடி பாய்ந்தால் 32 அடி பாயும் குட்டி.. தைரியமாக தாய்லாந்தில் படக்குழுவை மிரட்டிய சண்முக பாண்டியன்

Actor Vijayakanth and Shanmuga Pandiyan: சினிமாவில் காலம் காலமாக வாரிசு நடிகர்கள் ஈசியாக நடிப்பதற்கு வந்து விடுகிறார்கள். அந்த வகையில் சில இயக்குனர்களும் அவர்களை வைத்து படம் எடுத்தால் ஓரளவு பிரபலமாகிவிடும். படமும் ஓடிவிடும் அதனால் வசூல் முக்கால்வாசி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வாரிசு நடிகர்களை வைத்து இயக்கி வருகிறார்கள்.

அப்படித்தான் இயக்குனர் அன்பறிவு, சத்யராஜின் மகன் சிபிராஜை வைத்து வால்டர் என்ற படத்தை இரண்டு வருடங்களுக்கு முன் எடுத்தார். இப்படம் சஸ்பென்ஸ் ஆகவும், திரில்லர் ஆகவும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இவரை தொடர்ந்து தற்போது கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியனை வைத்து படைத்தலைவன் என்கிற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Also read: ஓவர் தலைகனத்தால் சத்யராஜிடம் இருந்து பறிக்கப்பட்ட 5 படங்கள்.. தலை தெரிக்க ஓடிய இயக்குனர் ஷங்கர்

இவர் ஏற்கனவே சகாப்தம், மதுரை வீரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இப்பொழுது படைத்தலைவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முனிஸ்காந்த்,யாமினி சந்தர், கஸ்தூரிராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

மேலும் கடந்த 25 ஆம் தேதி விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி சண்முக பாண்டியனின் படைத்தலைவன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இருந்தது. அதை பார்க்கும் பொழுது ஆக்சன் படம் போல் இருந்தது. அத்துடன் இந்த படம் யானை சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

Also read: மாந்திரீகத்தால் முடக்கப்பட்ட விஜயகாந்த்.. பரபரப்பான தகவலை கூறிய பிரபலம்

அதனால் இந்த படத்தின் சூட்டிங் கேரளா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 20 முதல் 25 யானைகளுடன் சண்முக பாண்டியன் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் யானைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடிவரும் காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்களை மிரள வைத்திருக்கிறதாம்.

இவரைப் பார்ப்பதற்கு அச்சு அசலாக கேப்டனை பார்ப்பது போல் இருக்கிறது என்று படக்குழுவில் உள்ளவர்கள் பேசுகிறார்களாம். கொஞ்சம் கூட இவர் கண்ணில் பயம் என்பதே தென்படவில்லை. முக்கியமாக யானை காலுக்கு அடியில் புகுந்து செய்யும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் பிரமிக்கும் வகையில் இருக்கிறதாம். அந்த வகையில் கேப்டன் 16 பாய்ந்தால் சண்முக பாண்டியன் 32 அடி பாய்கிறார் என்பதற்கு ஏற்ப இவருடைய பெர்பார்மன்ஸ் இருக்கிறது.

Also read: விஜயகாந்தின் உடல் நிலைக்கு என்ன ஆச்சு.? அதிர்ச்சியை கிளப்பிய விஜய பிரபாகரன்

Trending News