சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

Vijay : பரிசை வாரி இறைக்கும் தளபதியின் 10-ம் வகுப்பு மதிப்பெண்.. இப்ப வைரலாக என்ன காரணம் தெரியுமா?

விஜய் வேறு எந்த தொழில் செய்தாலும் இவ்வளவு பெரிய வெற்றியை கண்டிருப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால் சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஆசை வைத்து அதற்கான முயற்சியில் இறங்கி இப்போது மாபெரும் உயரத்தில் இருக்கிறார்.

அதுவும் யாராலும் எட்ட முடியாத உயரத்தில் இருந்தும் சினிமாவை விட்டு அரசியலில் களம் இறங்க உள்ளார். ஆனால் ஆரம்பத்தில் விஜய்க்கு படிப்பு சரியாக வராத காரணத்தில் தான் சினிமாவுக்கு சென்றதாக தகவல் வெளியானது.

ஆனால் விஜய்யின் பத்தாவது மார்க் இப்போது வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விஜய் லயோலா காலேஜில் விஸ்காம் படித்தார். அதன் பிறகு அப்படியே சினிமா ஆசையில் படங்களில் நடிக்க வந்து விட்டார்.

இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மற்றும் மாணவியருக்கு தொகுதி வாரியாக பரிசுகள் வழங்க இருக்கிறார். கடந்த ஆண்டு இதேபோல் விஜய் பரிசுகள் வழங்கியது இணையத்தில் பேசும் பொருளாக மாறியது.

விஜய் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்

அதிலும் அந்த நிகழ்ச்சியில் அசுரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை விஜய் கூறியிருந்தார். காடு இருந்த எடுத்துக்குவானுங்க, ரூபாய் இருந்தா புடுங்கிப்பானுங்க, படிப்பு மட்டும் உங்ககிட்ட இருந்தா எடுத்துக்கவே முடியாது என தளபதி அவ்விழாவில் பேசியிருந்தார்.

இந்நிலையில் விஜய் 10ம் வகுப்பில் எவ்வளவு மார்க் எடுத்திருக்கிறார் தெரியுமா? அவர் விருகம்பாக்கத்தில் இருந்த தனியார் பள்ளியில் பயின்றார். அவர் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது மொத்தமாக 1100 மதிப்பெண்ணுக்கு தேர்வு வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் தமிழில் 200 க்கு 155, ஆங்கிலத்தில் 200 க்கு 133, கணிதத்தில் 200க்கு 95, அறிவியலில் 300க்கு 206 மற்றும் சமூக அறிவியலில் 200 க்கு 122 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். மொத்தமாக 711 மதிப்பெண்கள் பத்தாம் வகுப்பில் விஜய் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு செய்தி இணையத்தில் பரவி வரும் நிலையில் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Trending News