ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யின் 69 ஆவது படத்திற்கு லட்டு மாதிரியான கதை.. அட்லீயை ஓரங்கட்டி சரியான இடத்தில் செக் வைத்த ஷங்கர்

Actor Vijay and Director Sharnkar: விஜய் தற்போது லியோ படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்து விட்டார். இதற்குப் பிறகு இப்படத்தின் பிரமோஷன் சம்பந்தமான வேலைகளை பார்க்க இருக்கிறார். இதற்கு நடுவில் அவ்வப்போது அரசியல் ரீதியான விஷயங்களுக்கும் விதை போட்டு வருகிறார். இப்படி நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக இருந்துட்டு வரும் விஜய் இவருடைய 68வது படத்தை வெங்கட் பிரபுவுடன் லாக் செய்து இருக்கிறார்.

இதுதான் இவர் நடிக்கப் போகும் கடைசி படம், இதற்கு அடுத்து மூன்று வருடங்களுக்கு பின் தான் சினிமாவிற்கு வருவார் என்று செய்திகள் எல்லாம் பரவலாக வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அரசியலுக்கு வருகிறார் என்ற சந்தோசம் இருந்தாலும் இவரை நடிகராக பார்த்து வந்த ரசிகர்கள் இனி இவர் அடுத்து நடிப்பாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Also read: அடுத்த தலைமுறை தான் என்னோட டார்கெட்.. அதிரடியாக இறங்கி அடிக்கும் விஜய்யின் மாடல்

ஆனால் இந்த குழப்பத்திற்கு மத்தியில் ஒரு பக்கம் இவருடைய ரசிகர்கள் விஜயின் 69 படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்ற பேச்சுக்கள் பரபரப்பாக பேச ஆரம்பித்து விட்டார்கள். முதலில் கௌதம் மேனன் இயக்கப் போகிறார் என்றும், அப்படி இல்லையென்றால் இவருடைய ஆசையான தம்பி அட்லீ உடன் கூட்டணி வைப்பார் என்றும் பல பேச்சுக்கள் அடிபட்டது.

ஆனால் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் தற்போது இந்த விவாதத்திற்குள் இயக்குனர் சங்கர் வந்திருக்கிறார். அதாவது விஜய்யும் இவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது ஷங்கர், விஜய் இடம் ஒரு ஸ்டோரியை சொல்லி இருக்கிறார். அது எந்த மாதிரியானது என்றால் அரசியல் கலந்த திரில்லர் கதை.

Also read: உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. விஜய்யை பார்த்து சிவகார்த்திகேயன் போட்ட பிளான்

அதனால் இதை கேட்டதும் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் நாம் சேர்ந்து பண்ணலாம் என்று அந்த ஸ்பாட்டிலே விஜய் அவருடைய முடிவை சொல்லி இருக்கிறார். ஏற்கனவே விஜய் அரசியலில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று எண்ணிய நிலையில் அவரைத் தேடி ஒரு லட்டு மாதிரியான கதை அமைந்தால் விடவா முடியும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

அதனால் விஜய்யின் 69 ஆவது படத்தை இயக்க வேண்டும் என்ற கனவு கோட்டை கட்டி வந்த அட்லீயை இயக்குனர் சங்கர் ஓரம் கட்டி விட்டார். எந்த இடத்தில் செக் வைத்தால் காரியத்தை சாதிக்கலாம் என்று சங்கருக்கு சொல்லவா செய்ய வேண்டும். ஆக மொத்தத்தில் தளபதி 69 படம் விஜய்யின் அரசியலுக்கு அஸ்திவாரப்படமாக நச்சென்று அமையப்போகிறது.

Also read: லியோ படத்தை இன்னும் மெருகேற்ற களமிறங்கும் விஜய்.. 1000 கோடி வசூல் கன்ஃபார்ம் தான் போல

Trending News