Actor Vijay: இந்தப் புயல் வந்தாலும் வந்துச்சு விளம்பரம் என்ற பெயரில் நடக்கும் அக்கப்போருக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. வருட கடைசி வந்தாலே சிங்கார சென்னை மக்கள் பீதியில் உறைந்து போகின்றனர். மழை, புயல், வெள்ளம் வந்து அனைவரின் இயல்பு வாழ்க்கையையும் புரட்டி போட்டு விடுகிறது.
அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு சென்னை மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. பல இடங்களில் அதன் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் அரசியல்வாதிகள் பலரும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
அதில் சின்னத்திரை பெரிய திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர். இது பாராட்டக்கூடியதாக இருந்தாலும் சிலர் அதை விளம்பரப்படுத்தி குளிர் காய்வது தான் கேவலமாக இருக்கிறது. அதில் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்யும் அக்கப்போர் ஒரு படி மேலே போயிருக்கிறது.
Also read: விஷாலுக்கு இருக்கும் தைரியம் விஜய்க்கு இல்லையே.. நீங்க வந்து என்ன பண்ணப் போறீங்க தளபதி
அந்த வகையில் புயல் பாதிப்பு நடந்து சில நாட்கள் கழித்து தான் விஜய் சோசியல் மீடியா பக்கத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்று தன்னுடைய நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை தொடர்ந்து இப்போது மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதில் விஜய்யின் அல்லக்கையான புஸ்ஸி ஆனந்த் செய்த ஒரு விஷயம் இப்போது பரபரப்பாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல்வாதிகள் விளம்பரத்திற்காக செய்வது போன்று ஏற்கனவே ஓரமாக இருந்த குப்பைகளை வாரி இவர் ஓரமா போடுவது போல் வீடியோ எடுத்து மீடியாவில் பரவ விட்டிருக்கிறார்.
அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும்போது கூட விஜய் போட்டோவை கையில் பிடித்தபடி ஒருவர் வீடியோவுக்கு போஸ் கொடுத்ததும் வைரலானது. வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் வேதனையில் இருக்கும் போது இப்படி மட்டமாக விளம்பரப்படுத்தும் இவர்களை நம்பியா விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார்.
இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகா? அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது. தன்னை சுற்றி இருப்பவர்களையும் வழிநடத்த தெரிந்திருக்க வேண்டும். அதேபோன்று புஸ்ஸி ஆனந்த் உடன் இருக்கும் வரையில் விஜய் அரசியலில் ஜொலிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.