Vijay’s Networth: இன்று காலையிலிருந்து விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கலை கட்ட ஆரம்பித்துவிட்டது. கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் இந்த அலப்பறைகளை ஆரம்பித்து விட்டனர். அதற்கேற்றவாறு கோட் டீமும் சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது.
அதன்படி தற்போது அட்டகாசமான ஒரு வீடியோவை தயாரிப்பு தரப்பு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதேபோன்று இன்று மாலை விஜய் மற்றும் பவதாரணி குரலில் இரண்டாம் பாடலும் வெளிவர இருக்கிறது.
இப்படி அமர்க்களமாக ஆரம்பித்துள்ள இந்த பிறந்த நாளில் விஜய்யின் சொத்து மதிப்பு பற்றிய தகவலும் கசிந்துள்ளது. தற்போது இவர் தான் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார்.
அதன்படி அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் தளபதி 69 காக இவருக்கு 275 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அப்படி பார்த்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்த ஷாருக்கானையே இவர் பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.
விஜய்யின் சொத்து மதிப்பு
மேலும் தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து மக்களுக்கான நலத்திட்டங்களையும் செய்து கொண்டு இருக்கிறார். இதற்காக அவர் கணக்கு பார்க்காமல் செலவழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் விஜய்யிடம் தற்போது 600 கோடி வரை சொத்துக்கள் இருக்கிறதாம். அதில் சென்னையில் நீலாங்கரை, சாலிகிராமம் உள்ளிட்ட பல இடங்களில் இவருக்கு ஆடம்பர பங்களாக்கள் இருக்கிறது.
அதே போன்று நிலங்கள் இன்னும் பிற அசையா சொத்துக்களும் இருக்கிறது. மேலும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி A8, மினி கூப்பர், பிஎம்டபிள்யூ சீரிஸ் 5 மற்றும் பல வித விதமான கார்கள் இருக்கிறது. இது அனைத்தின் மதிப்பு மட்டுமே 10 கோடியை தாண்டும்.
அது மட்டும் இன்றி விலை உயர்ந்த பைக், சைக்கிள்கள் என அனைத்தும் இருக்கிறது. இப்படி பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் விஜய் முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். இதற்கு மக்களின் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கும் என்பது வரும் தேர்தலில் தெரிந்து விடும்.
பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ள விஜய்
- செய்ய வேண்டியது இதுதான், TVK தலைவர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
- தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய்யின் அறிக்கை
- ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய GOAT டீம்